மணிரத்னம் இயக்கும் ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் பிரபு

மணிரத்னம் இயக்கும் ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் பிரபு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

prabhuகல்கி எழுதிய பிரபலமான நாவல் பெயர் ‘பொன்னியின் செல்வன்’.

இந்த நாவல் தற்போது மணிரத்னம் இயக்கத்தில் திரைப்படமாகிறது.

தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் இப்படத்தை படமாக்கவுள்ளனர்.

எனவே அனைத்து மொழிகளில் உள்ள 14 முன்னணி நடிகர்-நடிகைகளை தேர்வு செய்து வருகிறார்.

வந்தியத்தேவனாக கார்த்தி, அருள்மொழிவர்மனாக ஜெயம்ரவி, சுந்தரசோழனாக அமிதாப்பச்சன், ஆதித்த கரிகாலனாக விக்ரம், குந்தவை கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ், நந்தினியாக ஐஸ்வர்யாராய் ஆகியோர் நடிக்க உள்ளனர்.

ஐஸ்வர்யாராய் 2 வேடங்களில் நடிப்பதாக கூறப்படுகிறது.

பார்த்திபன், ரகுமான், மலையாள நடிகர் ஜெயராம் மற்றும் அமலாபால், ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோரும் நடிக்கின்றனர்.

மற்றொரு முக்கிய கேரக்டர்களில் பிரபு, நிழல்கள் ரவி ஆகிய இருவரும் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.

கிட்டதட்ட ரூ.700 கோடியில் இரண்டு பாகங்களாக எடுக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.

டிசம்பர் மாதம் சூட்டிங் தொடங்குகிறது.

தற்போது நடிகர்களுக்கு அவர்களது கேரக்டர்களுக்கு ஏற்ப பயிற்சிகளை அளித்து வருகின்றனர்.

மகளிருக்கான ‘கோடீஸ்வரி’ நிகழ்ச்சியை நடத்தும் ராதிகா

மகளிருக்கான ‘கோடீஸ்வரி’ நிகழ்ச்சியை நடத்தும் ராதிகா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kodeeswariவெள்ளித்திரையானாலும் சரி சின்னத்திரையானாலும் சரி தன் நடிப்பு முத்திரை பதித்து வருபவர் நடிகை ராதிகா.

அண்மைக்காலமாக சினிமாவில் நடிப்பதை குறைத்துக் கொண்டு டிவி சீரியல்களை தயாரிப்பதில் அதிக கவனம் செலுத்து வருகிறார்.

இவரது நடிப்பில் விரைவில் வெளியாகவுள்ள படம் ‘மார்க்கெட் ராஜா MBBS’ . இதில் ஆரவ் நாயகனாக நடித்துள்ளார்.

இந்த நிலையில், தற்போது டிவி நிகழ்ச்சித் தொகுப்பாளராக மாறியிருக்கிறார் ராதிகா.

பெண்கள் மட்டுமே கலந்துகொள்ளும் ‘கோடீஸ்வரி’ என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவுள்ளார்.

கௌதம் மேனனுடன் இணைந்தார் ‘பப்பி’ ஹீரோ வருண்

கௌதம் மேனனுடன் இணைந்தார் ‘பப்பி’ ஹீரோ வருண்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

gautham menon an d varunவனமகன், நெருப்புடா, கோமாளி ஆகிய படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தவர் வருண்,

இவர் பிரபல கல்வியாளர் ஐசரி கணேஷின் சகோதரி மகன் ஆவார்.

எனவே இவரை வைத்து பப்பி என்ற படத்தை தயாரித்து அதில் ஹீரோவாக்கினார் ஐசரி கணேஷ்.

இந்த திரைப்படம் தற்போதும் வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கிறது.

இந்த நிலையில், கௌதம் மேனன் இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார் வருண்.

இந்த படத்தையும் வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிக்கிறார்.

பேய்மாமா & இம்சை அரசன் படத்தில் வடிவேலுக்கு பதிலாக யோகிபாபு

பேய்மாமா & இம்சை அரசன் படத்தில் வடிவேலுக்கு பதிலாக யோகிபாபு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vadivelu and yogi babuதமிழ் சினிமாவில் வாரத்திற்கு 5 படங்கள் வருகிறது என்றால் அதில் குறைந்த பட்சம் 3 படங்களில் நடித்து வருகிறார் யோகிபாபு.

மற்ற 2 படங்களிலும் இவரை நடிக்க கேட்டு இருப்பார்கள். ஆனால் கால்ஷீட் பிரச்சினையால் இவரை அதை தவிர்த்திருக்கலாம்.

கடந்த வருடம் மட்டும் யோகிபாபு நடிப்பில் 20 படங்கள் வெளியானதாக கூறப்படுகிறது. இந்த வருடம் அதை தாண்டும் என எதிர்பார்க்கலாம்.

கூர்கா, ஜாம்பி உள்ளிட்ட சில படங்களில் நாயகனாகவும் நடித்துள்ளார்.

இந்த நிலையில் வடிவேலுவை வைத்து இயக்குனர் ஷக்தி சிதம்பரம் பேய் மாமா என்ற படத்தை இயக்கவிருந்தார். அதில் தற்போது யோகிபாபுவை ஒப்பந்தம் செய்து உள்ளனர்.

அதுபோல் நீண்ட காலமாக பிரச்சினைகளில் இருக்கும் இம்சை அரசன் 24-ம் புலிகேசி படத்திலும் வடிவேலுக்கு பதில் யோகிபாபுவை நடிக்க வைக்க ஆலோசனை நடக்கிறதாம்.

இது ஒரு புறம் இருந்தாலும் கமலின் இந்தியன்-2 மற்றும் ரஜினியின் தலைவர் 168 படத்தில் வடிவேலு நடிக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

BREAKING படத்தலைப்புடன் அஜித் 60 பட பூஜை தொடங்கியது

BREAKING படத்தலைப்புடன் அஜித் 60 பட பூஜை தொடங்கியது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Ajith 60 movie titled Valimai directed by Vinothநேர்கொண்ட பார்வை படத்தை அடுத்து தல 60 படத்தில் நடிக்கவுள்ளார் அஜித்.

இந்த படத்தை போனிகபூர் தயாரிக்க, வினோத் இயக்குகிறார்.

இந்த நிலையில் இந்த படத்தின் பூஜை குறித்த தகவல்களை அஜித் ரசிகர்கள் தினம் தினம் கேட்டுக் கொண்டே இருந்தனர்.

ஆனால் தயாரிப்பாளர் தரப்பு எதையும் தெரிவிக்கவில்லை.

எனவே அஜித் ரசிகர்களே தல 60 பட பூஜை தினம் என ஒவ்வொரு செய்திகளை தினம் கிளப்பினர்.

மேலும் பேனர், போஸ்டர், பூஜை, கேக் என பல கொண்டாட்டங்களையும் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் சற்றுமுன் வலிமை என்ற தலைப்பு வைக்கப்பட்ட கிளாப் போர்டுடன் அஜித் பட பூஜை படங்கள் வெளியாகியுள்ளது.

நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய யுவன் இசையமைக்கிறார்.

Ajith 60 movie titled Valimai directed by Vinoth

‘ஓ மை கடவுளே’ படத்தில் கெஸ்ட் ரோலில் விஜய்சேதுபதி

‘ஓ மை கடவுளே’ படத்தில் கெஸ்ட் ரோலில் விஜய்சேதுபதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijay Sethupathis cameo role in Oh My Kadavulaeஅறிமுக இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஆக்சஸ் பிலிம் பேக்டரி நிறுவனம் தயாரித்துள்ள படம் ‘ஓ மை கடவுளே’.

அசோக் செல்வன், ரித்திகா சிங், வாணி போஜன் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

தற்போது முக்கிய வேடத்தில் விஜய்சேதுபதியும் இணைந்துள்ளார்.

எனவே பட டீசரை நடிகர் விஜய்சேதுபதி வெளியிட்டுள்ளார். இந்த டீசர் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Vijay Sethupathi done cameo role in Oh My Kadavulae

More Articles
Follows