தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
லைகா தயாரிப்பில் கமல்ஹாசன் நடித்து வரும் படம் இந்தியன் 2.
ஷங்கர் இயக்கி வரும் இந்த படத்தில் காஜல் அகர்வால், சித்தார்த், டெல்லி கணேஷ், பாபிசிம்ஹா, ரகுல் பிரீத் சிங், வித்யூத் ஜமால், பிரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.
இந்த படத்தின் மூலம் நடிகர் விவேக்கும் இசையமைப்பாளர் அனிருத்தும் முதன்முறையாக கமலுடன் இணைகின்றனர்.
அதுபோல் ஷங்கர் அண்ட் கமல் படத்திற்கு அனிருத் இசையமைப்பது இதுதான் முதன்முறையாகும்.
இப்பட படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட கிரேன் அறுந்து விழுந்த விபத்தில் மூன்று பேர் உயிரிழந்தனர்.
இது தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது.
இதன்பின்னர் கொரோனா ஊரடங்கால் தற்போது சூட்டிங் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது.
தற்போது போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகளுக்கு மட்டும் தமிழக அரசு அனுமதி அளித்துள்ளதால் அந்த பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.
இதுவரை எடுக்கப்பட்ட காட்சிகளே 4 மணி நேரத்தை கடந்துள்ளதால் இந்தியன் 2 படத்தை இரண்டு பாகமாக ரிலீஸ் செய்யவுள்ளதாம் படக்குழு.
ராஜமௌலி இயக்கிய பாகுபலி படமும் இரண்டு பாகங்களாக வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.
Will Kamals Indian 2 to be released in two parts