தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
பாகுபலி படத்தின் மூலம் இந்திய சினிமா கவனத்தையே தன் பக்கம் ஈர்த்தவர் நடிகர் பிரபாஸ்.
இதன்பின்னர் பிரம்மாண்டமாக தயாரான சாஹோ படத்தில் நடித்தார்
தற்போது நாக் அஸ்வின் இயக்கத்தில் ராதே ஷ்யாம் என்ற படத்தில் தீபிகா படுகோன் உடன் இணைந்து நடிக்கவுள்ளார்.
இதனையடுத்து பிரபாஸின் 22 பட அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தன்ஹாஜி பட இயக்குநர் ஓம் ராவத் இயக்கத்தில் ‘ஆதிபுருஷ்’ என்ற படத்தில் நடிக்கிறார் பிரபாஸ்.
பூஷன் குமார், க்ரிஷான் குமார், ஓம் ராவத், பிரசாத் சுடார் மற்றும் ராஜேஷ் நாயர் ஆகியோர் இந்தப் படத்தைத் தயாரிக்கின்றனர்.
இப்படம் 3டி தொழில்நுட்பத்தில் இந்தி மற்றும் தெலுங்கில் உருவாகிறது.
மேலும் தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் டப் செய்யப்பட உள்ளது.
இப்பட படப்பிடிப்பு 2021-ல் தொடங்கி 2022-ல் படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Prabhas to star in Om Rauts 3D action movie Adipurush