தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
குணச்சித்திர வேடம் காமெடி வேடம் என எதுவானாலும் ரசிகர்களை ஈர்த்து வருபவர் நடிகர் மயில்சாமி.
கவுண்டமணி, வடிவேலு, விவேக் உள்ளிட்ட பலருடன் இணைந்து நடித்துள்ளார். தனியாகவும் காமெடி செய்துள்ளார்.
இவர் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக சினிமாவில் நடித்துக் கொண்டு வருகிறார்.
இந்த நிலையில் சென்னையில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு அவர் பதில் அளிக்கையில்…
“இந்து, முஸ்லீம், கிறிஸ்து என மதங்களை பிரித்து பேசுபவர்கள் மனிதர்களே கிடையாது. மூன்று பேரும் சேர்ந்து இருப்பது தான் இந்தியா.
உங்கள் ஓட்டுக்காக தயவு செய்து மக்களை ஏமாற்றாதீர்கள். ஆனால் மக்கள்்ஏமாற மாட்டார்கள். திருப்பி பதிலடி கொடுப்பார்கள். மதங்களால் மனிதர்களைப் பிரிக்க நினைத்தால் செருப்பால் அடிப்பேன்.” என்றார்.
Actor Mayilsamy angry speech about Religious Politics