தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ஃபர்ஹானா’. ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் அனுமோல், ஐஸ்வர்யா தத்தா, கிட்டி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
மே 12ஆம் தேதி இந்த படம் வெளியாக உள்ள நிலையில் படக்குழுவினர் செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது நடிகர் கிட்டி பேசும்போது,
நான் வாழ்க்கையானாலும், வேலையானாலும் ரசித்து செய்கிறவன். முதல்முறை தொடர்பு கொண்ட நெல்சன் சாரிடம்.. இந்த கதாபாத்திரத்திற்கு நான் சரியாக வருவேனா? என்று தெரியாது. நான் மிகவும் எடை குறைந்திருக்கிறேன் என்றேன். எங்களுக்கு அதுதான் சார் வேண்டும் என்றார். கதாபாத்திரத்தை வடிவமைக்கும் திடம், காட்சிகளில் நுணுக்கம் என்று அனைத்து விஷயங்களிலும் சிறப்பானவர் இயக்குநர் நெல்சன் வெங்கடேசன்.
நான் நடித்த 75 கதாபாத்திரங்களில் சில பாத்திரங்கள் என்னை வெகுவாக கவர்ந்தவை. அதில் ஒன்று.. இந்த படத்தில் வரும் என் கதாபாத்திரம். படபிடிப்பு இடம் பற்றா
குறையாக இருந்தாலும், என்ன தேவையோ அந்த இடத்திற்குள்ளேயே நுணுக்கமாக காட்ட வேண்டும் என்று கூறினார். அவர் கூறியதைபோல படக்குழுவினர், ஒளிப்பதிவில் திறமையாக செயல்பட்டிருக்கிறார்கள்.
மனித உணர்வுகளின் வெளிப்பாடுகளை அருமையாக கூறியிருக்கிறது ஃபர்ஹானா திரைப்படம்.
இந்த கதாபாத்திரத்திற்கு ஒரு குறிப்பிட்ட தளத்திற்கு கொண்டு போகும் என்று ஆழமாக நம்புகிறேன்.
ஜித்தன் ரமேஷ் உடன் சகோதரர் போலதான் பணியாற்றினேன்.
டிரீம் வாரியர்ஸ் நிறுவனம்.. முதல் 3 சிறந்த தயாரிப்பு நிறுவனங்களில் ஒருவராக இருக்கிறார்கள்.
கடந்த 20 வருடங்களில் எனக்கு சிறப்பான கதாபாத்திரம் கிடைத்தது ஃபர்ஹானா படத்தில் தான். இதற்கு அனைவரும் ஆதரவு கொடுக்க வேண்டும் என்றார்.
Actor Kitty praised the film Farhana