தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தமிழில் நச்சென்று நாலு படம்.. நாலு படமும் ஹிட் அடிக்கவே திடீரென பாலிவுட் பறந்தார் டைரக்டர் அட்லி.
தமிழில் ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் ஆகிய 4 படங்களை இயக்கிய பின் திடீரென எவருமே எதிர்பாராத வகையில் ஹிந்தியில் ஷாருக்கானை வைத்து ‘ஜவான்’ என்ற படத்தை இயக்கியுள்ளார் அட்லி.
இந்த படத்தில் தீபிகா படுகோனே முக்கிய வேடத்தில் நடிக்க விஜய் சேதுபதி, நயன்தாரா ஆகியோர் ஷாருக்கானுடன் இணைந்து நடித்துள்ளனர்.
அனிருத் இசையமைத்த இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானது. இந்த படம் செப்டம்பர் 7ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் அடுத்த படத்தையும் ஹிந்தியில் இயக்கவிருக்கிறாராம் அட்லி.
இந்த படம் விஜய் நடித்து 2016 இல் வெளியான ‘தெறி’ படத்தின் ரீமேக் என கூறப்படுகிறது.
ஏற்கனவே இந்த படம் விஜயகாந்த் நடித்த ‘சத்ரியன்’ படத்தின் காப்பி என்று கூறப்பட்டு வந்து நிலையில் தற்போது ‘தெறி’ படத்தை ஹிந்திக்கு கொண்டு செல்கிறார் அட்லி.
அட்லீ மற்றும் பாலிவுட் தயாரிப்பாளர் முராத் கெதானி இருவரும் இணைந்து இந்த படத்தை தயாரிக்கின்றனர்.
இந்த படத்தில் நாயகியாக நடிக்க கீர்த்தி சுரேஷிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
எனவே விரைவில் இது பற்றி அறிவிப்பை எதிர்பார்க்கலாம்.
Atlees next movie with Keerthy Suresh in Hindi