தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜெயிலர்’ படத்தின் டிரைலர் நேற்று ஆகஸ்ட் 2 தேதி மாலை 6 மணிக்கு வெளியானது.
இந்த ட்ரெய்லரில் ரஜினியின் ஓவர் பில்டப் பஞ்ச் டயலாக் எதுவும் இல்லாமல் மிகவும் யதார்த்தமாக நெல்சன் இயக்கிய முந்திய படங்களை போல் இருந்தது குறிப்பிடத்தக்கது.
எனவே இது அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்து உள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
இந்த படத்தில் மோகன்லால் முக்கிய வேடத்தில் நடித்திருப்பார் என்பதால் அவரின் காட்சிகள் பெரிதாக இடம் பெறவில்லை.
இந்த நிலையில் தற்போது இந்த ட்ரெய்லர் வெளியாகி 24 மணி நேரத்தை கடக்கின்ற நிலையில் இதுவரை 10 மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளது என படக்குழுவினர் அறிவித்து புதிய வீடியோவை வெளியிட்டுள்ளனர்.
சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் டிவிட்டர் பதிவில்.. “இங்க இவருதான் கிங்கு இவரு வைக்கிறதுதான் ரூல்ஸ் என ஒரு கோடி பார்வையாளர்களின் வீடியோ குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது படக்குழு.
இந்த ‘ஜெயிலர்’ ட்ரெய்லரில்.. “ஒரு கட்டத்துக்கு மேல என்கிட்ட பேச்சு இல்ல.. வீச்சு தான் என்கிற டயலாக் ரசிகர் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
The much awaited Jailer Showcase crosses 10M Views in 20 hours