வெள்ளிவிழா நாயகனுடன் ஒன்று.. வெண்பாவுடன் ஒன்று..; சந்தோஷத்தில் சந்தோஷ்

வெள்ளிவிழா நாயகனுடன் ஒன்று.. வெண்பாவுடன் ஒன்று..; சந்தோஷத்தில் சந்தோஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மோகனுடன் 1.. வெண்பாவுடன் 1.. இரட்டிப்பு சந்தோஷத்தில் சந்தோஷ் பிரபாகர்

”வெள்ளிவிழா” நாயகன் மோகனின் “ஹரா” மூலம் சினிமாவில் அறிமுகம் ஆகும் பத்திரிகையாளர் மகன்..

நாம் காண்கிற கனவுகளில் பிரதானமானது சினிமாவில் நடிகராவது… ஆனால் நிஜத்தில் சினிமாவை எட்டி பிடிப்பது அவ்வளவு எளிதல்ல அதற்கு பல காரணங்கள் உண்டு.

திரையுலகில் நுழைவதற்கு கண்டிப்பாக சிபாரிசு, வாரிசு என பல சூழல்களில் பலர் நேபோட்டிசம் அடிப்படையில் ஹீரோவாகவும், இயக்குனராகவும் களத்தில் இறங்கி தோல்வி கண்டு காணாமல் போகும் காலத்தில் ஒரு சாதாரண குடும்பத்தில் இருந்து கல்லூரி படிப்பை முடித்து ஒருவன் சினிமாவை அடைகிறான் என்றால் அவனுக்கு இந்த சினிமா ஏதோ ஒரு இடத்தை வழங்க காத்திருக்கிறது என்றுதான் அர்த்தம்.

அதிலும் முதல் படத்திலேயே வெள்ளிவிழா நாயகன் மோகன் நடிக்கும் செகண்ட் இன்னிங்க்ஸ் படமான “ஹரா” படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரம். அதோடு திரை பிரபலங்கள் மைம்கோபி, சுரேஷ்கோபி, அனுமோல், மொட்ட ராஜேந்திரன், வனிதாவிஜயகுமார், அனித்ரா, கவுஷிக் என ஏராளமான நட்சத்திரங்களுடன் சந்தோஷ் பிரபாகர் நடித்திருக்கிறார்.

இவர் பிரபல பத்திரிகையாளரும் சினிமா விமர்சகருமான கோடங்கி ஆபிரகாம் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமா விமர்சகர், பிரபல பத்திரிகையாளர் மகன் என்பதால் சிபாரிசு அடிப்படையில் வாய்ப்பு கிடைத்திருக்கும் என நினைத்தால் நீங்கள் ஏமாற்றம் அடைவீர்கள்…

பின் எப்படி “ஹரா” பட வாய்ப்பு கிடைத்த்து என அறிமுக நடிகர் சந்தோஷ் பிரபகரிடம் பேசினோம், “வணக்கம். அப்பா திரையுலகில் செய்தியாளராக இருந்தாலும் சிபாரிசு செய்வதை விரும்ப மாட்டார்.

“ஹரா” பட இயக்குனர் விஜய்ஸ்ரீஜி அவர்கள் அலுவலகத்திற்கு ஆடீஷனுக்கு போய் சின்ன ரோலில் நடிக்க தேர்வானேன். எனக்கு “ஹரா” முதல் படமல்ல… நான் நடிக்கத் தேர்வானது இதே இயக்குனர் விஜய்ஸ்ரீஜியின் ”பப்ஜி” படத்திற்காக. அதில் மிகச்சிறிய வேடம்.

அதில் எனது நடிப்பை பார்த்து அதன் பின்னர்தான் “ஹரா” வாய்ப்பு கிடைத்தது. அதிலும் தமிழ் சினிமாவின் வெள்ளிவிழா நாயகன் மோகன் சாருடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது பெரும் மகிழ்ச்சி.

இதற்கு காரணமான இயக்குனர் விஜய்ஸ்ரீஜி அவர்களுக்கு நன்றி.
ஹரா படம் சொல்லவேண்டிய கதை. இயக்குனர் விஜய்ஸ்ரீஜி மிக அழகாக எங்களை பயன் படுத்தி இருக்கிறார்.

இதோடு பெயரிடப்படாத இன்னொரு படத்தில் கதையின் நாய்கனாக நடித்து வருகிறேன். பொள்ளாச்சியில் முதற்க்கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ளது.

அந்தப்படத்தை இயக்கி வருபவர் திரையுலகில் எல்லாருக்கும் அறிமுகமானவர்தான் என்றாலும் அவரின் அறிமுக படம் என்பதால் படத்தின் பெயரும், இயக்குனர் பெயரும் இப்போதைக்கு வேண்டாமே… என்றார் சிரித்துக் கொண்டே…

சரி சந்தோஷ் அந்த பெயரிடப்படாத படத்தில் வேறு யாரெல்லாம் நடிக்கிறார்கள்? என அடுத்த கேள்விக்கு போனோம்..

“பொன்வண்ணன் சார், மைம் கோபி சார், சத்யா அண்ணன் ஆகியோருடன் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது. வெண்பா எனக்கு ஜோடியாக நடித்து இருக்கிறார். இன்ஸ்டா பிரபலம் அஞ்சனா என் தங்கையாக நடித்து இருக்கிறார்.

அடுத்த கட்ட படப்பிடிப்பில் இன்னும் பல பிரபலங்கள் இணைய உள்ளனர். அன்றாட வாழ்வில் நாம் சந்திக்கும், கேட்கும் ஒரு சம்பவம்தான் இந்த படம்” என்றார்.

Santhosh Prabakar in Haraa movie updates

பெண்கள் வேலை பார்க்கும் மில்லில் 2 ஷோ.. இதுவே PT SIR வெற்றி.. – ஹிப் ஹாப் ஆதி

பெண்கள் வேலை பார்க்கும் மில்லில் 2 ஷோ.. இதுவே PT SIR வெற்றி.. – ஹிப் ஹாப் ஆதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பெண்கள் வேலை பார்க்கும் மில்லில் 2 ஷோ.. இதுவே PT SIR வெற்றி.. – ஹிப் ஹாப் ஆதி

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் டாக்டர் ஐசரி K கணேஷ் தயாரிப்பில், ஹிப் ஹாப் தமிழா ஆதி கதையின் நாயகனாக நடிக்க, இயக்குநர் கார்த்திக் வேணுகோபாலன் இயக்கத்தில், கடந்த மே 24ஆம் தேதி, கலக்கலான கமர்ஷியல் ஃபேமிலி எண்டர்டெயினராக வெளியான திரைப்படம் ‘P T சார்’.

ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் பாராட்டினில் பெரும் வரவேற்பைக் குவித்த இப்படம், திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இப்படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில், படக்குழுவினர் பத்திரிக்கை, ஊடக, பண்பலை நண்பர்களைச் சந்தித்தனர்.

இந்நிகழ்வினில்…

ஆர்ட் டைரக்டர் அமரன் பேசியதாவது…

இயக்குநர் கார்த்திக் அவர்களுக்கு என் முதல் நன்றி. அவர் சொன்ன கதை எனக்கு ரொம்பப் பிடித்திருந்தது. நாம் தினமும் கடந்து போகும் நிகழ்வை, நாம் தவறவிடுவதை, நம் மனதைத் தாக்கும் நிகழ்வை மையமாக வைத்து, அழகான திரைக்கதை அமைத்திருந்தார். இந்த படத்தை தயாரித்த டாக்டர் ஐசரி K கணேஷ் அவர்களுக்கு நன்றி. என்னுடன் உழைத்த சக கலைஞர்களுக்கு நன்றி.

ஆண் எனும் கர்வம் அழியவேண்டும் என நினைப்பவன் நான், நம்மைச் சுற்றி நடக்கும் விசயங்களைக் கவனிக்கையில் நான் ஆணாக இருப்பதை நினைத்து வெட்கப்படுகிறேன். நாம் வாழும் சமூகத்தைப் பிரதிபலிக்கும் படம் தான் இது. இப்படத்தைப் பாராட்டி வரவேற்ற அனைவருக்கும் நன்றி

ஒளிப்பதிவாளர் மாதேஷ் மாணிக்கம் பேசியதாவது…

இந்தப்படத்தை எல்லோரிடமும் சேர்த்த பத்திரிக்கையாளர்களுக்கு நன்றி. இந்த வாய்ப்பு கிடைக்கக் காரணமாக இருந்த ஹிப்ஹாப் ஆதி, இயக்குநருக்கு நன்றி. இந்த படத்தைத் தயாரித்த டாக்டர் ஐசரி K கணேஷ் அவர்களுக்கு நன்றி. என்னுடன் உழைத்த சக கலைஞர்களுக்கு நன்றி.

இயக்குநர் கார்த்திக் வேணுகோபாலன் பேசியதாவது…

ஆதி-க்கு நன்றி. நான் யோசித்ததை ஏற்று, அதைக் கதையாகக் கொண்டு சேர்த்தது அவர் தான். அதே போல் நான் கேட்டதையெல்லாம் தந்து, இப்படத்தைப் பெரிய அளவில் கொண்டு சேர்த்த ஐசரி சாருக்கு பெரிய நன்றி. மேலும் இப்படத்தில் உழைத்த என் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி.

இளவரசு சார் இப்படத்தில் தந்த நடிப்பு, படத்திற்கு மிகப்பெரிய பலமாக இருந்தது, அவருக்கு என் நன்றி. முனீஷ்காந்த் மிக அட்டகாசமான நடிப்பைத் தந்தார். இரண்டாம் பாதி கோர்ட் டிராமாவாக ஆகிவிடக்கூடாது என்பதால் ஜட்ஜாக பாக்யராஜ் அவர்களை அணுகினேன், அவர் வந்த பிறகு இந்தப்படம் இன்னும் சிறப்பாக அமைந்தது. இந்தக்கதை யோசித்த போது ஹராஸ்மெண்ட் பற்றி எல்லோரும் சொல்லிவிட்டார்கள் ஆனால் அதன் பிறகு பெண்கள் படும் கஷ்டத்தைச் சொல்லலாம் என நினைத்தேன்.

நிறையப்பேர் படம் பார்த்துவிட்டு எங்களுக்கும் இது நடந்துள்ளது இப்படம் நல்ல தெளிவைத் தந்துள்ளது என்று கூறுகிறார்கள் மிகப்பெரிய மகிழ்ச்சி. படத்தை வெற்றி பெறச்செய்த அனைவருக்கும் நன்றி.

நடிகர் இளவரசு பேசியதாவது…

இயக்குநர் வேணுகோபாலுக்கு நான் தான் நன்றி சொல்ல வேண்டும். பல படங்களில் நடிக்கக் கேட்கும்போது நாமும் வீட்டு பில் கட்ட வேண்டுமென்பதால் தான் போக வேண்டும். ஒரு சில இயக்குநர்கள் நமக்கு சிறப்பான கதாப்பத்திரத்தை தருவார்கள். அப்படி கார்த்திக் எனக்கு நல்ல கதாபாத்திரத்தைத் தந்துள்ளார்.

இந்த மாதிரி அப்பா மகளை மையப்படுத்திய கதையை, இன்றைய காலத்தில் சொல்ல ஒரு ஹீரோ தேவைப்படுகிறது. சினிமாவைத் தாண்டிய இமேஜ் உள்ள ஹிப்ஹாப் ஆதி இப்படத்தைச் செய்ததற்கு நான் நன்றி சொல்லிக்கொள்கிறேன். தனக்கு ஒரு வியாபாரம் இருக்கும் சூழ்நிலையில் இம்மாதிரி கதையை தேர்ந்தெடுத்த அவருக்கு நன்றி.

சினிமாவில் சில நேரம் நல்ல விதைகள் விழும். அந்த வகையில் கார்த்தி மிகச்சிறப்பான இயக்குநர். காலேஜ் சேர்மனை வில்லனாகக் காட்டும் கதை என நினைக்காமல், கல்லூரி நடத்தும் ஐசரி கணேஷ் சார் இப்படத்தைத் தயாரித்ததற்கு என் நன்றி. எந்நாளும் எனக்கு வாத்தியாராக இருக்கும் பாக்யராஜ் சாருக்கு நன்றி. என் கதாபாத்திரத்தை விமர்சனத்தில் பாராட்டிய அனைவருக்கும் நன்றி.

இயக்குநர் பாக்யராஜ் பேசியதாவது…

ஹீரோ ஹிப்ஹாப் ஆதிக்கு என் முதல் நன்றி, அவர் நடிக்க நல்ல கதை தேர்ந்தெடுக்க வேண்டுமென்று நினைக்காமல், நல்ல கதையைத் தயாரிப்பாளரிடம் எடுத்துச் சென்று, அந்த இயக்குநருக்கு வாழ்வை ஏற்படுத்தித் தந்ததற்கு நன்றி. ஐசரி இந்தக்கதையைத் தேர்ந்தெடுத்துத் தயாரித்ததற்கு நன்றி. கார்த்திக் வேணுகோபால் நான் பிறந்த ஊரிலிருந்து வந்திருக்கிறார் என்பது மகிழ்ச்சி.

நல்ல கதையைச் சிறப்பான திரைக்கதையில் தந்துள்ளார் வாழ்த்துக்கள். படத்தில் உழைத்த கலைஞர்களுக்கு என் வாழ்த்துக்கள்.

வேல்ஸ் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் டாக்டர் ஐசரி K கணேஷ்
‘P T சார்’ படத்தின் மூன்றாவது நிகழ்ச்சி இது. படம் வெளியாகி மூன்றாவது வாரமாக வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இன்றைய காலத்தில் சினிமாக்கள் இரண்டு நாள் ஓடுவது கடினமாக இருக்கிறது. அதற்கு நிறையக் காரணங்கள் இருக்கிறது. ஓடிடி தளங்கள் வந்த பிறகு சினிமா மாறிவிட்டது. அதையெல்லாம் தாண்டி ‘P T சார்’ நன்றாகப் போகிறது.

அதிலும் பலர் ஒரு நல்ல சினிமாவை எடுத்திருக்கிறார்கள் என்று பாராட்டினார்கள் அது பெரிய மகிழ்ச்சி. வெற்றிப்படம் என்றாலும் திருப்தி இருக்க வேண்டும் அதற்குக் காரணமாக இருந்த இயக்குநர் கார்த்திக் அவர்களுக்கு நன்றி. அவர் சிறந்த இயக்குநராக வருவார். அவரது அடுத்த படத்தையும் நானே தயாரிக்கிறேன். புது இயக்குநர்கள் சிக்கனமாகப் படமெடுங்கள், நல்ல படமெடுங்கள். ஹிப்ஹாப் ஆதி தான் இந்தப்படத்தை என்னிடம் கொண்டு வந்தார். அவர் இசையும் இதில் நன்றாக இருந்தது. பாக்யராஜ் சார் க்ளைமாக்ஸில் கலக்கிவிட்டார். படத்தில் உழைத்த அனைவருக்கும் நன்றி. படத்தைப் பாராட்டிய உங்களுக்கு என் நன்றிகள்

நடிகர் இசையமைப்பாளர் ஹிப்ஹாப் தமிழா ஆதி பேசியதாவது…

ஒவ்வொரு பத்திரிக்கை நண்பர்களுக்கும் எங்கள் படத்தைச் சரியாகக் கொண்டு சேர்த்ததற்காக என் நன்றி. இன்று வரை படம் நன்றாகப் போய்க்கொண்டிருக்கிறது அதற்குக் காரணம் நீங்கள் தான். உங்கள் பாராட்டுக்கு நன்றி. உங்கள் அறிவுரையின் படி நல்ல படங்களைத் தொடர்ந்து செய்வேன்.

ஒரு கல்வியாளராக இருந்துகொண்டு இந்தப்படத்தைத் தயாரித்ததற்காக ஐசரி சாருக்கு நன்றி. பெண்கள் வேலை பார்க்கும் மில்லில் இரண்டு ஸ்பெஷல் ஷோ போட்டார்கள் என்று சொன்ன போது, படம் வசூலித்தது என்பதை விட அதிகம் சந்தோசப்பட்டார் அது எனக்கும் மகிழ்ச்சியாக இருந்தது. தொடர்ந்து உங்களுடன் படம் செய்ய ஆவலுடன் இருக்கிறேன்.

இந்தப்படத்தை நம்பி வந்த ஆர்டிஸ்ட் அனைவருக்கும் நன்றி. கோர்ட் ரூம் சின்ன போர்ஷன் அதை நம்பி வந்து, எங்களுக்காக நடித்து தந்த பாக்யராஜ் சாருக்கு நன்றி. இளவரசு ஒரு பாத்திரமாக வாழ ஆரம்பித்து விடுகிறார். ஷீட்டிங்கில் அவ்வளவு அர்ப்பணிப்புடன் நடிப்பதைப் பார்த்து அவரிடம் நிறையக் கற்றுக்கொண்டேன். பிரபு சார், பட்டிமன்றம் ராஜா சார், தேவதர்ஷிணி மேடம், என பெரிய பெரிய ஜாம்பவான்கள் இருந்தார்கள்.

பெரும் ஒத்துழைப்பு தந்தார்கள். இதையெல்லாம் ஒழுங்கு படுத்தி, நல்ல டைரக்டர், சிக்கனமான டைரக்டர் என்று பெயரெடுத்த கார்த்திக்கிற்குப் பாராட்டுக்கள். இந்தப்படத்தில் என்னை நாயகனாக்கியதற்கு நன்றி கார்த்திக். இந்தப்படத்தில் அனைத்து கலைஞர்களும் முழு அர்ப்பணிப்புடன் உழைத்தார்கள் அவர்கள் அனைவருக்கும் நன்றி. முனீஷ் அண்ணாவுடன் திரும்ப நடித்தது மகிழ்ச்சி. இந்தப்படத்தின் வெற்றியை விட எனக்கு மனதளவில் மிகப்பெரிய திருப்தியை இந்தப்படம் தந்துள்ளது அனைவருக்கும் நன்றி.

இந்த படத்தில் ஹிப்ஹாப் தமிழா ஆதி நாயகனாக நடிக்க, காஷ்மிரா பர்தேசி, அனிகா, பாக்கியராஜ், பிரபு, தியாகராஜன், பாண்டியராஜ், திவ்யதர்ஷிணி, உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர்.

இயக்குநர் கார்த்திக் வேணுகோபாலன் திரைக்கதை எழுதி இயக்க, வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் டாக்டர் ஐசரி K கணேஷ் பிரம்மாண்டமாகத் தயாரித்துள்ளார்.

ஹிப்ஹாப் தமிழா இசையமைத்துள்ளார். இந்தப் கடந்த மே 24ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது..

PT SIR movie got huge response from ladies says Aadhi

HARAA கவிஞராகவும் கலக்கும் விஜய் ஸ்ரீஜி..; மோகன் ரசிகர்களை கவர்ந்த ரஷாந்த் அர்வின்

HARAA கவிஞராகவும் கலக்கும் விஜய் ஸ்ரீஜி..; மோகன் ரசிகர்களை கவர்ந்த ரஷாந்த் அர்வின்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

HARAA கவிஞராகவும் கலக்கும் விஜய் ஸ்ரீஜி..; மோகன் ரசிகர்களை கவர்ந்த ரஷாந்த் அர்வின்

வெள்ளிவிழா நாயகன் மோகன் நடிப்பில் இயக்குனர் விஜய் ஸ்ரீஜி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஹரா’.

‘ஹரா’ படத்தின் டிரைலரும் வெளியாகி இதுவரை 20+ லட்சம் பார்வையாளர்களை நெருங்கிக் கொண்டிருக்கிறது..

இந்த மாதம் ஜூன் 7ம் தேதி ஹரா படம் வெளியாக உள்ள நிலையில் இந்த ரிலீஸை கொண்டாட காத்திருக்கிறார்கள் மோகன் ரசிகர்கள்.

விஜய் ஸ்ரீ ஜி இயக்கியுள்ள இந்த படத்தில் மோகனுடன் ஒரு மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்துள்ளது.

மலையாள நடிகை அனுமோல் மோகனுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இவர்களுடன் சீனியர் நடிகர் சாருஹாசன், யோகி பாபு, மொட்ட ராஜேந்திரன், வனிதா விஜயகுமார், ஜெயக்குமார், ரயில் ரவி, சுரேஷ் மேனன் தீபா ஷங்கர், சிங்கம்புலி, ஆதவன், அனித்ரா நாயர் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் ஒளிப்பதிவை பிரஹத் முனியசாமி மற்றும் மனோதினகரன் கையாண்டுள்ளனர்.

ரஷாந்த் அர்வின் இசையமைத்துள்ள இந்த பட எடிட்டிங் பணிகளை குணா செய்து இருக்கிறார்..

இந்தப் படத்தில் ஐந்து பாடல்கள் இடம் பெற்றுள்ள அனைத்து பாடல்களையும் இயக்குனர் விஜய் ஸ்ரீஜி எழுதியிருக்கிறார்.

கயா முயா என்ற குத்து பாடலையும் படைத்தலைவன் என்ற அதிரடி ஆக்சன் பாடலையும் எழுதி இருக்கிறார்.. இத்துடன் வாடா மல்லி என்ற காதலர்களை கவரும் பாடலையும் மகளே.. என்ற தாலாட்டு பாடலையும் மற்றும் மருதாணி என்ற பாடலையும் எழுதி இருக்கிறார்.

1980-களில் வெளியான மோகன் படங்கள் என்றாலே பாடல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் மிக எதிர்பார்ப்பு இருக்கும். இளையராஜா எஸ் பி பி கூட்டணிக்கு அப்படி ஒரு எதிர்பார்ப்பு இருந்து வந்தது.

தற்போது 14 வருடங்களுக்குப் பிறகு மோகன் மீண்டும் திரையில் நடிக்க இருப்பதால் மோகன் ரசிகர்கள் மீண்டும் மெலோடி பாடல்களை எதிர்பார்த்த நிலையில் ரசிகர்களை கவரும் விதமாகவும் இன்றைய ட்ரெண்டுக்கு ஏற்ப இசையையும் ரஷாந்த் அர்வின் இசை அமைத்திருப்பது குறிப்பிடத்தக்கது..

ஜூன் 7ம் தேதி இந்த படம் வெளியாக உள்ள நிலையில் எதிர்பார்ப்பை எகிறச் செய்யும் வகையில் இதன் வெளியீட்டை பிரபல நிறுவனங்கள் போட்டி போட்டு கொண்டு பெற்று வருகின்றன.

தமிழக வெளியீடு உரிமையை எல்மா என்ற நிறுவனமும் திருச்சி செங்கல்பட்டு உள்ளிட்ட ஏரியாக்களின் வெளியீட்டு உரிமையை பிரபல சக்தி ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனமும் பெற்றுள்ளது.

‘ஹரா’ படத்திற்கு சென்சார் யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

பெரும்பாலும் கோவை மற்றும் கேரளா பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ள இந்த படத்தை பிரம்மாண்டமாக கோயம்புத்தூர் மோகன் ராஜ், ஜி மீடியா ஜெய ஸ்ரீ விஜய் இணைந்து தயாரித்துள்ளனர்.

Mohans Haraa release and Jukebox updates

‘மல்லி’ டிவி சீரியலில் கலக்கும் 1980ஸ் ஹீரோயின்ஸ் அம்பிகா – பூர்ணிமா – நளினி

‘மல்லி’ டிவி சீரியலில் கலக்கும் 1980ஸ் ஹீரோயின்ஸ் அம்பிகா – பூர்ணிமா – நளினி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘மல்லி’ டிவி சீரியலில் கலக்கும் 1980ஸ் ஹீரோயின்ஸ் அம்பிகா – பூர்ணிமா – நளினி

1980-களில் தென்னிந்திய திரை உலகத்தை கலக்கிய அம்பிகா, பூர்ணிமா பாக்யராஜ், நளினி மூவரும் முதல் முறையாக உங்கள் சன் டிவியில் ஒளிபரப்பாகும் மல்லி என்ற தொலைக்காட்சி தொடரில் இணைந்து கலக்குகின்றனர்.

நாயகன் நாயகியை சேர்த்து வைக்கப் போராடும் கதாபாத்திரத்தில் பூர்ணிமா பாக்யராஜும் நளினியும் கலக்க அவர்களுக்கு பதிலடி கொடுத்து கலகலப்பையும் டென்ஷனையும் கூட்டுகிறார் அம்பிகா..

மூன்று முன்னாள் நாயகிகளின் கலக்கல் நடிப்பில் விறுவிறுப்பும் திருப்பங்களும் கலந்து கலகலப்பாக பயணித்துக் கொண்டிருக்கிறது மல்லி மெகாத்தொடர்.

திங்கள் முதல் ஞாயிறு வரை இரவு 9 மணி முதல் 10 மணி வரை சன் டிவியில் ஒளிபரப்பாகும் இத்தொடரை சரிகமா நிறுவனம் சார்பில் B.R.விஜயலட்சுமி தயாரிக்கிறார்.

விஜய், நிகிதா,பேபி ராஹிலா, மாஸ்டர் நிதிஷ், பூர்ணிமா பாக்கியராஜ், மதன்பாப், தேவ் ஆனந்த், சாய்ராம், வெங்கட், கிருத்திகா, நளினி, பாரதிமோகன், ஐசக், மற்றும் பல முன்னனி நடிகர்கள் நடித்திருக்கின்றனர்.

திரைக்கதை & வசனம் : தமயந்தி
ஒளிப்பதிவு : விஸ்வநாத்
இசை : தரண்
இயக்கம் : ஸ்டாலின்
படைப்பாக்கம் : நீடா.கே.சண்முகம்
படைப்பாக்கத்தலைமை : ப்ரின்ஸ் இம்மானுவேல்

Ambika Nalini Poornima starring in Malli Sun Tv Serial

சர்ச்சைக்காக அல்ல.. ‘நீட்’ மனவலியை உரக்கச் சொல்லும் ‘அஞ்சாமை’… – விதார்த்

சர்ச்சைக்காக அல்ல.. ‘நீட்’ மனவலியை உரக்கச் சொல்லும் ‘அஞ்சாமை’… – விதார்த்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சர்ச்சைக்காக அல்ல.. ‘நீட்’ மனவலியை உரக்கச் சொல்லும் ‘அஞ்சாமை’… – விதார்த்

*“மக்களுடைய மனநிலையை, மக்களின் வலியை சொல்லும் விதமாக இந்தப்படம் உண்மையை பேசி இருக்கிறது…”

*“’அஞ்சாமை’ படம் வாணி போஜனை வேற லெவலுக்கு கொண்டு செல்லும்” என ஆச்சர்யம் பகிரும் விதார்த்..

சினிமாவில் கமர்ஷியல் வெற்றியை நோக்கி பல நாயகர்கள் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக கதைகளை தேர்வு செய்யும் விதத்திலும் நடிப்பிலும் தனக்கென ஒரு தனி பாணியை பின் பற்றி வருகிறார் நடிகர் விதார்த்.

படம் வெற்றி பெறுமா, கமர்ஷியல் அம்சங்கள் இந்தப்படத்தில் இருக்கிறதா என்றெல்லாம் பார்க்காமல், இந்த கதையும் கதாபாத்திரமும் நம் நடிப்புக்கு தீனி போடும் விதமாகவும், மக்களுக்கு நெருக்கமான கதாபாத்திரங்களில் தன்னை பிரதிபலிப்பது போன்று தான் அவரது கதை தேர்வுகள் இருக்கின்றன.

அப்படி கடந்த வருடம் வெளியான ‘இறுகப்பற்று’ படத்தின் மூலம் ரசிகர்களை ஆச்சர்யப்படுத்துகிறார் நடிகர் விதார்த். தற்போது ஜூன்-7ஆம் தேதி வெளியாகவுள்ள ‘அஞ்சாமை’ படத்திலும் நடிப்பில் இன்னொரு பரிமாணத்தை வெளிப்படுத்தி உள்ளார்.

அறிமுக இயக்குநர் எஸ்.பி.சுப்புராமன் இயக்கியுள்ள இந்தப்படத்தை திருச்சித்ரம் சார்பில் டாக்டர் திருநாவுக்கரசு தயாரித்துள்ளார்.

நல்ல படங்களை தேர்ந்தெடுத்து ரசிகர்களுக்கு தந்து வரும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் இந்தப்படத்தை வெளியிடுவதால் படம் மீதான எதிர்பார்ப்பு இன்னும் அதிகமாகி இருக்கிறது. விதார்த்துக்கு ஜோடியாக வாணி போஜன் நடித்துள்ளார். நீட் தேர்வை அடிப்படையாக கொண்டு இந்தப்படம் உருவாகியுள்ளது.

படம் குறித்து நாயகன் விதார்த் கூறும்போது…

“நான் படங்களை தேர்வு செய்வதற்கு முக்கிய காரணமாக கதையை மட்டும் தான் பார்க்கிறேன். அந்தவகையில் ‘அஞ்சாமை’ படம் சிலர் சொல்லுவது போல வைரலாக ஒரு சர்ச்சையை உருவாக்கும் கதையா என்றால் சர்ச்சையை உருவாக்குவது எங்கள் நோக்கம் அல்ல.. படம் வெளியாகும்போது அது உங்களுக்கே தெரியும்.

எந்த ஒரு விஷயத்தையும் ஜோடனையாகவோ அல்லது அதிகப்படுத்தியோ சொல்லாமல் இந்த படம் உண்மையை பேசி உள்ளது என்று நம்புகிறேன். நீட் தேர்வுக்கு ஆதரவா, எதிர்ப்பா என்கிற விஷயத்திற்குள்ளேயே நாங்கள் போகவில்லை.

படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்சன்ஸ் நடைபெற்ற சமயத்தில் எனக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் அங்கே சென்று விடுவேன். அந்தவகையில் கிட்டத்தட்ட 25 தடவைக்கு மேல் இந்த படத்தை பார்த்துவிட்டேன்.

மக்களுடைய மனநிலையை, மக்களின் வலியை சொல்லும் விதமாக இந்தப்படம் உண்மையை பேசி இருக்கிறது என்று தான் நான் புரிந்து கொண்டேன். சும்மா சொல்லக்கூடது, நடிகை வாணி போஜனை இந்த படம் வேற லெவலுக்கு கொண்டு செல்லும். இதற்குப் பிறகு அவர் என்ன பண்ணப் போகிறார் என எதிர்பார்க்க வைக்கும் விதமாக இந்த படத்தில் நடித்திருக்கிறார்.

என்னுடைய மகள் ஏழாவது படிக்கிறாள். புத்தகத்தை மட்டும் தலையில் வைத்துக்கொள் என்று அவளை கட்டாயப்படுத்துவதில்லை. நடனமோ, இசையோ எது பிடித்திருக்கிறதோ அதற்கு அவள் விரும்பியபடி செல்கிறாள்.

இன்று இருக்கும் குழந்தைகள் ரொம்பவே தெளிவாக இருக்கிறார்கள். அவர்களிடமிருந்து தான் நாம் நிறைய கற்றுக் கொள்ள வேண்டி இருக்கிறது. அவர்களை ஆதரித்தால் மட்டும் போதும் என நான் நினைக்கிறேன். நான் நடிகனாக விரும்பியதை எனது பெற்றோர் ஆதரித்ததால் தானே இந்த இடத்தில் நான் இருக்கிறேன் ?. ஒவ்வொரு நாளும் என் பெண் பேசும் விஷயங்களை பார்த்து ஆச்சரியப்பட்டு இருக்கிறேன். என் பெண்ணிடம் நான் ஏதாவது சொல்வதை விட இன்றுவரை அவளிடம் இருந்து ஏதாவது கற்றுக் கொள்ள முடியுமா என்று தான் பார்க்கிறேன்.

குழந்தைகள் அவர்களுக்கு என்ன பிடிக்கிறதோ அதை படிக்கிறார்கள். நாம் தான் அவர்களின் ரிசல்ட்டை நோக்கி மட்டும் ஓடிக்கொண்டிருக்கிறோம். அவர்களது கல்வி குறித்து இப்படி முடிவு எடுத்திருக்கலாமோ, அப்படி முடிவு எடுத்திருக்கலாமோ என்றெல்லாம் குழப்பிக் கொள்ள தேவையில்லை. சந்தோசமாக வாழ்க்கையை அனுபவித்து போய்க்கொண்டே இருக்க வேண்டும்.

என்னுடைய வேலை நடிப்பது மட்டும்தான். என் படங்களும், எல்லா படங்களும் ஓட வேண்டும் என்று ஆசைப்படுவேன். அப்படி ஓடினால் தான் என்னை இயக்க இருக்கும் அத்தனை பேர்களுக்கும் தங்களது கதையை படமாக்க வாய்ப்பு கிடைக்கும்.
இவ்வாறு விதார்த் கூறியுள்ளார்.

Vidharth interview about Anjaamai movie and Neet exam

INDIAN2 கதறவிட்ட அனிருத் & சிம்பு.; ஷங்கரால் அறிமுகப்படுத்தப்பட்ட கமல் ரசிகர் சித்தார்த் ஆப்சென்ட்

INDIAN2 கதறவிட்ட அனிருத் & சிம்பு.; ஷங்கரால் அறிமுகப்படுத்தப்பட்ட கமல் ரசிகர் சித்தார்த் ஆப்சென்ட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

INDIAN2 கதறவிட்ட அனிருத் & சிம்பு.; ஷங்கரால் அறிமுகப்படுத்தப்பட்ட கமல் ரசிகர் சித்தார்த் ஆப்சென்ட்

ஏ எம் ரத்னம் தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் இரு வேடங்களில் நடித்து 1996-ம் ஆண்டு வெளியாகி பெரிய வெற்றிபெற்ற திரைப்படம் “இந்தியன்”.

இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது.

இதில் விவேக், சமுத்திரகனி, பாபி சிம்ஹா, காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

லைக்கா நிறுவனம் மிகப்பிரமாண்டமாக தயாரிக்க அனிருத் இசை அமைத்து வருகிறார்.. ங்கர் படத்திற்கு அனிருத் இசையமைப்பது இதுவே முதன்முறையாகும்.

சென்னை நேரு ஸ்டேடியத்தில் ஜூன் ஒன்றாம் தேதி இந்த படத்தின் பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

பாரா, நீலோற்பலம், காலண்டர், கதறல்ஸ், கம் பேக் இந்தியன், சகசக ஆகிய ஆறு பாடல்கள் வெளியிடப்பட்டன. இந்த ஆறு பாடல்களும் இணையத்தில் வெளியாகி கவனத்தை ஈர்த்து வருகிறது.

இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக நடிகர் சிலம்பரசன் இயக்குனர்கள் லோகேஷ் கனகராஜ் நெல்சன் உள்ளிட்டர் கலந்து கொண்டனர்.

கம் பேக் இந்தியன்.. தாத்தா வராரு கதற விடப் போறாரு… என்ற பாடலுக்கு அனிருத் மேடையில் ஆடி ரசிகர்களை கதறவிட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் சிம்புவின் பேச்சும் மேடையில் பரபரப்பை உண்டாக்கியது.

கமல் பேசும்போது தேவர் மகன் படத்திற்கு பிறகு சிவாஜி அவர்களை வைத்து நான் மகனாக அவர் தந்தையாக நடிக்க ஒரு படத்தை இயக்க காத்திருந்தேன்.. அந்த சமயத்தில் தான் ஷங்கர் இந்தியன் படத்தின் கதையை கொண்டு வந்தார். கிட்டத்தட்ட இரண்டு படத்தின் கருவும் ஒன்றே ஆகும் அப்போது சிவாஜி அவர்களிடம் இது பற்றி சொன்னபோது நான் அப்பா நீ மகன் என்று இரு கேரக்டர்களை விட நீயே தந்தை நீயே மகன் என்ற கேரக்டர் உனக்கு பொருத்தமாக இருக்கும் என்று கூறியிருந்தார் அதற்கு பிறகு தான் இந்தியன் உருவானது என்றார் கமல்ஹாசன்.

இயக்குனர் ஷங்கர் பேசும்போது… உலகத்திலேயே கமல் போல ஒரு நடிகரை எங்கும் பார்க்கவே முடியாது.. 360 டிகிரியில் நடிக்கக்கூடிய ஒரே நடிகர் அவர்தான். கேமரா எங்கு வைக்கப்பட்டிருக்கிறது? எந்த ஆங்கிளில் படமாக்கிக் கொண்டிருக்கிறார்கள்? எத்தனை நடிகர்கள் நடிக்கிறார்கள்? நாம் எப்படி நடிக்க வேண்டும் என்று எல்லா விஷயத்தையும் கவனித்து அதற்கு ஏற்ப செயல்பட்டு நடிக்கக்கூடிய ஒரே நடிகர் கமல்தான்.

தற்போது 361 நடிகராகவும் அவர் தன்னை அப்டேட் செய்து கொண்டே இருக்கிறார். அவரின் அர்ப்பணிப்பு அளப்பறியாது. முதன்முறையாக அவர் இந்தியன் படத்திற்காக தாத்தா வேஷம் போட்டு வந்த போது எனக்கு மெய் சிலிர்த்தது.. கிட்டத்தட்ட 28 ஆண்டுகளுக்குப் பிறகும் அவர் இந்தியன் தாத்தா வேடத்தில் வந்தது அதே மெய்சிலிர்க்கும் உணர்வு வந்தது.

சின்னக்கலைவாணர் விவேக் இப்போது இல்லை. ஆனால் இந்தியன் 2 வந்த பிறகு விவேக் என்றும் நம்முடன் இருப்பார்.. அவருக்கும் கமலுக்கும் அப்படி ஒரு கெமிஸ்ட்ரி ஒர்க்கவுட் ஆகியிருக்கிறது.

இந்தியன் 2 படத்தில் காஜல் அகர்வால் காட்சிகள் இல்லை.. ஆனால் இந்தியன் 3 படத்தில் காஜல் அகர்வால் காட்சிகள் இருக்கிறது.” என்று பேசினார் சங்கர்.

நள்ளிரவு ஒரு மணி வரை இந்த நிகழ்ச்சி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் சித்தார்த் கலந்து கொள்ளவில்லை.

நடிகர் கமல்ஹாசனின் தீவிர ரசிகர் சித்தார்த் என்பதும் பாய்ஸ் படத்தில் இயக்குனர் சங்கரால் அறிமுகப்படுத்தப்பட்டவர் சித்தார்த் என்பதும் இங்கே கவனிக்கத்தக்கது.

நடிகர் சித்தார்த் கலந்து கொள்ளாதது ஏன் என ரசிகர்களும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இக்கேள்விகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தனது இன்ஸ்டா பக்கத்தில் சித்தார்த் ஸ்டோரி ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில்,..

“என்னுடைய அன்பையும், வாழ்த்தையும் நடிகர் கமல்ஹாசன் மற்றும் இயக்குநர் சங்கருக்கு தெரிவித்து கொள்கிறேன். என்னுடைய முந்தைய திட்டங்களினால் இந்த இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள முடியவில்லை” என குறிப்பிட்டுள்ளார் சித்தார்த்.

Indian2 Audio launch highlights Kamal Shankar speech

More Articles
Follows