தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
HARAA OTT வயசு பொண்ணுக்கு லீவு… எல்லாருக்கும் தெரிஞ்சாகனும் சட்டம்.. மோகன் அட்வைஸ்
இயக்குனர் விஜய் ஸ்ரீஜி இயக்கத்தில் மோகன் நடிப்பில் உருவான படம் ‘ஹரா’.
கிட்டத்தட்ட 14 வருடங்களுக்குப் பிறகு மோகன் ரீ என்ட்ரி கடந்த ஜூன் மாதம் வெளியானது.. 1980களில் நடிகர் மோகனை ரொமான்டிக் ஹீரோவாக பார்த்த ரசிகர்கள் இந்த ஹரா படத்தில் முழுக்க முழுக்க ஆக்சன் ஹீரோவாக பார்த்து ரசித்தனர்.
இதில் மோகன் ஜோடியாக மலையாள நடிகை அனுமோல் நடித்து இருந்தார். யூனிவர்சல் சப்ஜெக்டாக உருவான இப்படத்தில் ‘காலங்களில் அவள் வசந்தம்’ புகழ் கௌஷிக் மற்றும் ‘பவுடர்’ நாயகி அனித்ரா நாயர் மற்றொரு ஜோடியாக நடித்துள்ளனர்.
இந்தப் படத்தில் மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு விடுமுறை வேண்டும் என கருத்து சொல்லப்பட்டது.. இது வலைத்தளங்களில் வைரலாகி சர்ச்சையானது.. ஆனால் இந்தியா தவிர சில நாடுகளில் மாதவிடாய் நாட்களுக்கு பெண்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது..
பள்ளியில் படிக்கும் போதிலிருந்தே ஐபிசி சட்டங்களை மாணவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தும் ‘ஹரா’ திரைப்படத்தை கோயம்புத்தூர் எஸ் பி மோகன் ராஜ் தயாரித்துள்ளார்..
இந்த நிலையில் திரையரங்குகளில் மக்கள் வரவேற்பை பெற்ற இந்த படம் தற்போது ஜூலை 5ஆம் தேதி முதல் அமேசான் பிரைம் ஓடிடி மற்றும் ஆஹா ஓடிடி தளங்களில் வெளியாகி உள்ளது.
ஜூலை 5 இன்று ஓடிடி-யில் வெளியான மற்ற படங்களை விவரங்கள் இதோ…
ஆஹா:
மார்க்கெட் மகாலட்சுமி
(market mahalakshmi)
ஹரா (Harra)
நெட்பிளிக்ஸ்:
டெஸ்பரேட் லைஸ் (Desperate Lies)
கோயோ (Goyo)
அமேசான் பிரைம்:
மிர்சாபூர் சீசன் 3 (Mirzapur Season 3)
ஜியோ சினிமா:
ஹி வெண்ட் தட் வே (He Went That Way)
சோனி லிவ்:
மலையாளி பிரம் இந்தியா (Malayali From India)
Haraa and other OTT movie release updates