தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
வேட்டையன் விமர்சனம் 4.25/5.. குறி வெச்சா இரை விழும்
ஸ்டோரி…
ரஜினி என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்.. இவரது மனைவி மஞ்சு வாரியார்.
குற்றவாளிகளை என்கவுண்டர் செய்வதில் தமிழக காவல்துறையில் பிரபலம்.. இந்த நிலையில் இவருக்கு கன்னியாகுமரியில் இருந்து பள்ளி ஆசிரியை துஷாரா விஜயன் ஒரு கடிதம் எழுதுகிறார்.. அதில் எங்கள் பள்ளியில் கஞ்சா பொருட்களை ரவுடிகள் பதுக்கி வைக்கிறார்கள்.. எனவே நீங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடிதம் எழுதுகிறார்.
இதனையடுத்து போலீஸ் கிஷோர் மற்றும் ரித்திகா சிங் மற்றும் போலீஸ் இன்பார்மர் பகத் பாசில் உதவியுடன் அந்த ரவுடியை தேடி கண்டுபிடித்து என்கவுண்டர் செய்து விடுகிறார் ரஜினிகாந்த்..
ஆனால் அவர் ஒரு அப்பாவி நிரபராதி என மனித உரிமை ஆலோசகர் அமிதாப்பச்சன் ரஜினி மீது நடவடிக்கை எடுக்கிறார்.
அதன் பிறகு என்ன நடந்தது.? அவர் நிரபராதி என்றால் குற்றவாளி யார்.? இதன் பின்னணியில் நடந்தது என்ன.? என்பதெல்லாம் மீதிக்கதை..
கேரக்டர்ஸ்…
சமீபகாலமாக ரஜினிகாந்த் தனக்கான கதைகளை தேர்ந்தெடுக்காமல் கதைக்காக தன்னை மாற்றிக் கொண்டார் என்னை என்றே சொல்லலாம்.. ஜெயிலரை தொடர்ந்து வேட்டையன் படத்திலும் அசத்தியிருக்கிறார்… ரஜினியின் காஸ்டியூம் கலக்கல்..
பெரிய பில்டப் & மாஸ் காட்சிகள் எதுவும் இல்லாமல் கேரக்டருக்கு ஏற்ப ஸ்டைலிஷ் லுக்கில் மாஸ் காட்டியிருக்கிறார்..
குறி வைச்சா இரை விழனும் என்று ரஜினி பஞ்ச் பேசும்போது தியேட்டரில் விசில் பறக்கிறது.. அதுபோல ரஜினி இன்ட்ரோ காட்சியில் சுருட்டுக்குள் இருந்து சூறாவளி கிளம்புவது போல அனல் பறக்கிறது.
பல நேரங்களில் ரஜினியே காமெடி செய்து இருக்கிறார்.. ஒரு காட்சியில்.. “சார் உங்க மனைவி கிட்ட சொல்லுங்க சார் என்று ரவுடி கெஞ்சும் போது.. டேய் முட்டாள்.. எந்த பொண்டாட்டி டா கணவர் பேச்சை கேக்குறாங்க.. என ரஜினி கிண்டல் அடிப்பது சூப்பர்..
ரஜினியை கேள்வி கேட்கும் உயர் அதிகாரியாக அமிதாப்பச்சன்.. இவருக்கு ட்ரைலரில் டப்பிங் கொடுத்திருந்த பிரகாஷ்ராஜ் குரலை நல்ல வேலையாக நீக்கி விட்டார்கள்.. இந்த குரல் பொருத்தம்..
ராணா டகுபதி கொஞ்ச நேரமே வந்தாலும் ஸ்டைலிஷ் லுக் வில்லன்..
இதில் காமெடி இல்லையே சீரியஸ் ஆக இருக்கே என நினைக்கையில் பகத் பாசில் கேரக்டர் பளிச்சிடுகிறது.. இவரை டீ கொடுக்கும் பையனாக விட்டுவிட்டார்களே என நினைக்கையில் அதன் பிறகு அவரது கேரக்டரில் வரும் டூவிஸ்ட் செம… ரித்திகாவை கிண்டல் அடிப்பது துஷாராவிடம் கடலை போடுவது என ரசிக்க வைத்திருக்கிறார்..
கம்பீரமான போலீஸ் அதிகாரியாக ரித்திகா.. படம் முழுக்க ரஜினியுடன் வந்து கவனம் பெறுகிறார்.. ரித்திகாவுக்கும் பகத்துக்கும் உள்ள சீன்ஸ் ஜாலி ரகம்..
துஷாரா விஜயன் சீன்ஸ் உடனே முடிந்து விட்டதே என நாம் நினைக்கையில் படத்தின் முழுக்கதையும் அவரை சுற்றியே நடக்கிறது.. தூள் கிளப்பி இருக்கிறார் துஷாரா.. வில்லனிடம் தலையில் அடிபட்டு கண் சொருகி விழும் காட்சி நடிப்புக்கு உதாரணம்..
அழகான மனைவியாக அன்பான துணைவியாக மஞ்சு வாரியார் மயக்க வைக்கிறார்.. பெற்றோர்கள் செய்யும் பாவம் குழந்தையை பாதிக்கும் என்பதால் இவர் குழந்தை கூட பெற்றுக் கொள்ளாமல் இருப்பது சென்டிமென்ட் ரகம்.. இவர்களின் உறவினராக டிவி நடிகர் ரக்ஷன்.. துள்ளல் கேரக்டரில் கவனம் பெறுகிறார்..
எவரும் எதிர்பாராத கேரக்டரில் அபிராமி அழகாகவும் ஸ்டைலிஷ் ஆகவும் அசத்தல் அபி.. முஸ்லீம் பெண்ணாக ரோகினியும் கவர்கிறார்..
டெக்னீசியன்ஸ்…
மனித உரிமை செயல்பாடுகள் மற்றும் அதன் நடவடிக்கைகளை மிகத்துல்லியமாக கையாண்டு இருக்கிறார் இயக்குனர் ஞானவேல்.. அதற்கு அமிதாப்பச்சன் என்ற மிகப்பெரிய ஆளுமையை பொருத்தி இருப்பது சிறப்பு.
‘ஜெய்பீம்’ படத்தில் போலீஸ் விசாரணை வழக்கறிஞர் வாதம் மையப்படுத்தி எடுத்திருந்த ஞானவேல் இந்த படத்தில் முழுக்க முழுக்க என்கவுண்டரை மையப்படுத்தி திரைக்கதை அமைத்திருக்கிறார்.. அதில் ரஜினிகாந்த் அமிதாப்பச்சன் ஆகிய மிகப்பெரிய ஜாம்பவான்களை பக்காவாக பொருத்தி இருக்கிறார்.
ரஜினிக்காக கூடுதல் மெனக்கட்டு பின்னணி இசையை தெறிக்க விட்டுள்ளார் அனிருத்.. மனசிலாயோ பாட்டு பட்டையை கிளப்பி இருக்கிறது.. அதற்கு ரஜினி மஞ்சுவாரியாரும் போடும் ஆட்டமும் ரசிக்க வைக்கிறது செம.. கூடவே அனிருத் ஆட்டமும் அசத்தல்..
அதுபோல Generation Rajination சூப்பர் ஸ்டார் சாங் ரசிகர்களின் தேசிய கீதமாக மாறினாலும் ஆச்சரியம் இல்லை.
பிலோமின் ராஜ் படத்தொகுப்பு செய்திருக்கிறார்.. படத்தில் நீளம் 163 நிமிடங்கள் என்றாலும் எங்கும் போர் அடிக்காமல் படத்தை நகர்த்திருப்பது சிறப்பு..
எஸ் ஆர் கதிர் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார் கன்னியாகுமரி.. இவரது கை வண்ணத்தில் கண்கொள்ளாக் காட்சி.. கடலில் என்கவுண்டர் செய்யும் காட்சி ராணா ஹெலிகாப்டர் பறக்கும் காட்சி என அனைத்தையும் விருந்தாக அமைத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் கதிர்.
படத்தின் வசனங்களும் ஆங்காங்கே கவர்க்கின்றன.. முக்கியமாக போலீஸ் 4 வகைப்படும் என பகத் கூறும் போது நேர்மைக்கு போலீஸ் திறமைக்கு போலீஸ் என வேறுபடுத்தி காட்டி காட்டி இருப்பது ஹைலைட்..
பணக்கார திருட மாட்டான்.. சேரி பசங்க திருடுவாங்க.. வெள்ளையா இருக்குறவன் பொய் சொல்ல மாட்டான்.. என்னய்யா இதெல்லாம் என்ற ரஜினி போலீஸ் கேள்வி கேட்பது நெத்தியடி..
ரஜினி ரசிகர்களை மட்டும் குறி வைக்காமல் அனைத்து மக்களுக்கும் பிடிக்கும் படமாக கொடுத்திருக்கிறார் ஞானவேல்.. அதிலும் போலீஸ் என்கவுண்டர் செய்வது சாதாரணமல்ல.. பலருக்கு பதில் சொல்லியாக வேண்டும்.. மனித உரிமை கமிஷன், நீதிமன்றம் & மக்களுக்கும் பதில் அளிக்க வேண்டும் என்பதையும் காட்சிப்படுத்தி இருக்கிறார்.
அரசு பள்ளி கல்வியை பயன்படுத்தி கார்ப்பரேட் நிறுவனங்கள் செய்யும் சதி திட்டத்தையும் அம்பலப்படுத்தி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி இருக்கிறார் இயக்குனர் ஞானவேல்.
ஆக வேட்டையன்.. தலைவர் குறி வச்சா தப்பாது
Rajinikanths Vettaiyan movie review