தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு பிறகு கமல்ஹாசனுக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான செவாலியர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விருதை பெறும் இரண்டாவது தமிழ் நடிகர் கமல் என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே, அவரது ரசிகர்கள் முதல் அனைவரும் தங்களது பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இவரது நெருங்கிய நண்பர் ரஜினிகாந்த் தன் ட்விட்டரில் கூறியுள்ளதாவது..
“எங்கள் தலைமுறையின் நடிகர் திலகம் செவாலியர் அருமை நண்பர் கமல்ஹாசன் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்கள்” என பதிவிட்டுள்ளார்.