தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
மாபெரும் வெற்றி பெற்ற சிங்கம் படத்தின் மூன்றாம் பாகம் தற்போது தயாராகி வருகிறது.
ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கும் இப்படத்தில் சூர்யாவுடன் அனுஷ்கா, ராதாரவி, நாசர் விவேக், சூரி, ரோபோ சங்கர், சாம்ஸ் உள்ளிட்டவர்கள் நடித்து வருகின்றனர்.
முக்கிய வேடத்தில் ஸ்ருதிஹாசன் நடிக்க, இவருக்கு அம்மாவாக ராதிகா நடிக்கிறாராம்.
ஹரி இயக்கத்தில் இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
போஸ்ட் புரோடக்ஷன்ஸ் பணிகள் முடிவடைந்ததும், அக்டோபர் மாதத்தில் படம் தயாராகிவிடுமாம்.
எனவே இனி சிங்கத்தின் விநியோகம் சூடு பிடிக்கும் என எதிர்பார்க்கலாம்.