தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கிரிக்கெட் வீரர் தோனி அவர்கள் தன் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்டி இருக்கும் MSDhoni The Untold Story என்ற படத்தின் ப்ரோமோஷனுக்காக இந்தியா முழுவதும் பயணம் செய்கிறார்.
இப்படத்தை தமிழிலும் வெளியிட உள்ளனர். செப்டம்பர் 30ஆம் தேதி இப்படம் ரிலீஸ் ஆகிறது.
நேற்று இதற்கான ப்ரோமோஷன் சென்னையில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியை திவ்யதர்ஷிணி தொகுத்து வழங்கினார். ஜோதிகா மற்றும் அவரின் குழந்தைகள் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக் கொண்டனர்.
அப்போது தமிழ் நடிகர்களில் ரஜினி மற்றும் சூர்யாவை பிடிக்கும் என்றார்.
அப்போது திடீரென எழுந்து ‘என் வழி தனி வழி’ என சூப்பர் ஸ்டார் வசனத்தை ரஜினி ஸ்டைலில் கூறி அரங்கத்தையே அதிர வைத்தார்.
அப்போது இதை பார்த்து கொண்டிருந்த ரசிகர்கள் அட… நாமளே ரஜினி வெறியருனுங்க. இவரு நம்மளையே மிஞ்சிடுவாரு போல என பேசிக் கொண்டனர்.
அதன்பின்னர் தனுஷ் வீட்டில் ரஜினியை தோனி சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.