தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சினிமாவில் எந்த ஒரு பின்புலமும் இல்லாமல் உழைத்து முன்னேறியவர் நடிகர் அஜித்.
இவரே ரசிகர் மன்றங்கள் வேண்டாம் என்ற பிறகும், இவருக்கான கூட்டம் நாளுக்குள் நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
திரையுலகில் இன்றுடன் இவர் 25 ஆண்டுகளை நிறைவு செய்கிறார்.
எனவே அஜித் ரசிகர்கள் இதை பல்வேறு விதங்களில் கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் கும்பகோணத்தை சேர்ந்த ரசிகர்கள் இன்று அஜித் சிலையை திறந்து வைக்கின்றனர்.
இந்த சிலையை உருவாக்க ரூ. 1 லட்சம் வரை செலவாகியுள்ளதாம்.
20 கிலோ எடையில், 4 அடி உயரத்திற்கு கண்ணாடி இழைகளால் இந்த சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது.
ரசிகர்கள் முன்னிலையில் இன்று இந்த சிலை திறப்பு விழா நடைபெற உள்ளது.
Fans launching Ajith Statue at Kumbakonam today