தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
விஜய், ஏ.ஆர்.ரஹ்மான் அட்லி, தேனாண்டாள் பிலிம்ஸ் ஆகியோர் கூட்டணியில் உருவாகியுள்ள மெர்சல் படம் கடந்த தீபாவளியன்று வெளியானது.
இப்படத்தில் இடம் பெற்ற வசனங்கள் ஜிஎஸ்டி தொடர்பான வசனங்களுக்கு பாஜக கட்சித் தலைவர்கள் கடும் ஆட்சேபம் தெரிவித்து வருகிறார்கள்.
சமூக வலைதளங்களில் படத்தின் காட்சிகளை நீக்கக் கூடாது என்று பலரும் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், ‘மெர்சல்’ படத்துக்கு ஆதரவாக விஜய் சேதுபதி கூறியிருப்பதாவது…
கருத்துச் சுதந்திரம் இல்லாமல் இந்தியாவை ஜனநாயக நாடு என்று சொல்லாதீர்கள்.
மெர்சலுக்காக மக்கள் குரல் கொடுக்கும் நேரம் இது என்று அவர் தெரிவித்திருக்கிறார்.
Vijay Sethupathi supports Mersal movie in GST dialogue issue