தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
எங்கும் எதிலும் கபாலி மயம்தான், எனவே, ஒரு சில தனியார் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு விடுமுறை அளித்தன.
ஆனால் ரஜினிக்கே உரித்தான வேகம், விறுவிறுப்பு ஆகியவை கபாலியில் இல்லை என பரவலாக குறைகள் எழுந்தன.
எனவே படத்தின் விறுவிறுப்புக்கு தடையாக உள்ள சில காட்சிகளை வெட்டப்பட்டுள்ளன.
மலேசியா மாணவர்களுடன் ரஜினி உரையாடுவது, மற்றும் மனைவிக்காக ரஜினி அலைந்து தேடுவது உள்ளிட்ட சீன்களை வெட்டியுள்ளனர்.
அதாவது கிட்டதட்ட 12 நிமிடங்கள் குறைக்கப்பட்டுள்ளதாம். இவை கபாலி தெலுங்கு பதிப்பில் மட்டும் குறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதனால் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளதாக கூறப்படுகிறது.