தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
இந்திய சினிமாவையே அதிர வைக்கும் அளவுக்கு மிகப்பிரம்மாண்டமான படங்கள் அண்மைக்காலமாக தயாராகி வருகிறது.
இதுவரை இல்லாத செலவில் ரூ. 600 கோடியில் 2.0 படத்தை லைகா தயாரித்துள்ளது.
ஷங்கர் இயக்கியுள்ள இதில் ரஜினிகாந்த், அக்சய்குமார், எமி ஜாக்சன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
அடுத்த வாரம் நவம்பர் 29ல் இப்படம் உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாகிறது.
இந்தியாவில் மட்டும் 6700 தியேட்டர்களில் 32,500 காட்சிகளாக 2.0 படம் திரையிடப்பட உள்ளதாம்.
வெளிநாடுகளில் 4,000 தியேட்டர்களில் வெளியாகும் என கூறப்படுகிறது. ஆக மொத்தம் 10,000க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் வெளியாகவுள்ளது.
இந்திய சினிமாவை பொறுத்தவரை பாகுபலி 2 படம்தான் அதிக தியேட்டர்களிலும், அதிக காட்சிகளிலும் திரையிடப்பட்ட படமாக இருந்தது.
அந்தப் படம் 6500 தியேட்டர்கள், 31,000 காட்சிகளாக திரையிடப்பட்டது. அந்த சாதனையை 2.0 படம் முறியடிக்கும் என கூறப்படுகிறது.
மேலும் முதல் நாள் வசூலில் பாகுபலி 2 சாதனையை முறியடிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இது மட்டும் நடைபெற்றால் தமிழ் சினிமாவுக்கு கிடைத்த பெருமையாக இது கருதப்படும்.
2pointO movie plans to break Baahubali2 record on first day