தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கொரோனா ஊரடங்கால் கிட்டத்தட்ட 8 மாதங்களாக தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படவில்லை.
இதனால் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்ற கேள்வி மாணவர்கள் & பெற்றோர்களிடையே தினம் தினம் எழுந்தது.
தற்போது ஆன்லைன் மற்றும் கல்வி தொலைக்காட்சி வாயிலாக பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
10,11,12 ம் வகுப்பு மாணவர்களுக்கு சில பாட பகுதிகள் மட்டும் குறைக்கப்பட்டுள்ளது.
தற்போதும் பள்ளிகள் திறப்பதில் மேலும் காலதாமதம் ஏற்படும் நிலையே உள்ளது.
இதனால் 1 முதல் 9-ம் வகுப்பு வரை பாடத்திட்டங்களை 50% குறைப்பதற்கு பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
ஆனால் இது தொடர்பான எந்த அறிக்கையும் அரசு சார்பில் இதுவரை தெரிவிக்கப்படவில்லை.
About 50% school syllabus reduced in Tamil Nadu for 2020 ?