தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சென்னை அண்ணா பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் & பல்கலைக்கழக விமானவியல் துறை சார்பாக தக்சா நிறுவனம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிறுவனத்திற்கு நடிகர் அஜித் ஆலோசகராக இருந்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கி வருகிறார் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.
2018ல் தக்சா நிறுவனம் உலக அளவில் நடைபெற்ற ட்ரோன் போட்டியில் பங்கெடுத்தது. இந்தியாவின் சார்பில் அஜித்தை ஆலோசகராக கொண்ட தக்சா நிறுவனமும் தேர்வு செய்யப்பட்டது.
மேலும் மாநில அளவில் ட்ரோன் தயாரிப்பில் தக்சா நிறுவனம் கடந்த ஆண்டு மத்திய அரசுக்கு ட்ரோன்களை தயாரிக்கவும் தேர்வாகியிருந்தது.
இந்த நிலையில் இந்திய ராணுவத்திற்கு ரூ 165 கோடி மதிப்பிலான 200 ட்ரோன்களை தயாரித்து வழங்க ஒப்பந்தமாகியுள்ளது.
அடுத்த 1 ஆண்டில் இந்த ட்ரோன்கள் தயாரிக்கப்பட்டு இந்திய ராணுவத்திடம் ஒப்படைக்கும் என கூறப்படுகிறது.
ட்ரோன்கள் தயாரிக்க இந்திய ராணுவத்துடன் இணைகிறார் நடிகர் அஜித்குமார். 165 கோடி ரூபாய் மதிப்பிலான ட்ரோன்களை இந்திய ராணுவத்திற்காக தயாரித்து வழங்கும் ஒப்பந்தத்தை அஜித் ஆலோசகராக இருக்கும் தக்ஷா குழு பெற்றுள்ளது.
Actor Ajith mentored Dhaksha to supply drones to Indian Army