தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
‘சின்ன கலைவாணர்’ என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுபவர் நடிகர் விவேக்.
மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த விவேக் சிகிச்சை பலனின்றி இன்று ஏப்ரல் 17ல் அதிகாலை 4.45 மணிக்கு விவேக் காலமானார் என அதிகாரப்பூர்வ தகவல் வெளியானது.
அவருக்கு திரையுலகினர் ரசிகர்கள் அஞ்சலி இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இன்று பிற்பகல் சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து மேட்டுக்குப்பம் பகுதியில் உள்ள மின் தகன மயானத்துக்கு விவேக்கின் உடல் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது.
இதனை தொடர்ந்து வழிநெடுகிலும் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
தமிழக அரசு உத்தரவின்படி மாநில காவல்துறை சார்பாக சென்னை ஆயுதப்படையினர் மயானத்தில் அணிவகுத்து நின்றனர்.
பின்னர் வானை நோக்கி தங்களின் துப்பாக்கியால் மூன்று முறை சுட்டனர்.
அதன் பின்னர் இரண்டு நிமிட மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதன் பின்னர் சம்பிரதாய சடங்குகளை நிறைவேற்ற விவேக் உடல் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
தமிழக மக்கள் மனதில் விவேக் எவ்வளவு பெரிய ஹீரோவாக திகழ்ந்துள்ளார் என்பதை இன்றைக்கு அவருக்கு அஞ்சலி செலுத்து வந்த மக்கள் கூட்டத்தை பார்த்தே புரிந்து கொள்ள முடியும்.
கொரோனா காலம் என்பதையும் மக்கள் பொருட்படுத்தாமல் கூட்டமாக அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.
இந்நிலையில் நடிகர் விவேக் அளித்த கடைசி பேட்டி ஒன்றில் தனது மகளின் திருமணம் பற்றி பேசியிருக்கிறார்.
அதில், ‛‛சினிமாவையும், குடும்பத்தையும் எப்போதும் நான் ஒன்றாக இணைக்க மாட்டேன் என தெரிவித்துள்ளார்.
மகள்கள் பற்றி விவேக் கூறும்போது…
‛‛மூத்த மகள் அமிர்தநந்தினி ஆர்கிடெக்ட்டாக உள்ளார். அவருக்கு மாப்பிள்ளை பார்த்து வருகிறோம்.
இளையமகள் தேஜஸ்வினி சிட்டி வங்கியில் வேலை பார்க்கிறார். இருவருக்கும் சினிமாவில் நாட்டமில்லை. அவர்கள் வாழ்க்கை அவர்கள் கையில் என தெரிவித்துள்ளார்.
மகளின் திருமணத்தை பார்க்கலாம் என நிச்சயம் நினைத்திருப்பார் சின்ன கலைவாணர் விவேக்.
அதற்குள் விண்ணுலகில் தன் நகைச்சுவை பணியை தொடர சின்ன கலைவாணர் சென்று விட்டாரோ..??!!
Actor Vivek talks about his daughters in recent interview