தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமா திரையுலகில் முன்னணி ஹீரோயின்களில் ஒருவர் காஜல் அகர்வால்.
தமிழில் விஜய், அஜித், சூர்யா, கார்த்தி, தனுஷ், ஜெயம்ரவி உள்ளிட்ட முன்னணி ஹீரோக்கள் பலருடன் ஜோடியாக நடித்திருக்கிறார்.
தற்போது ஷங்கர் இயக்கத்தில் கமலுடன் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், காஜல் அகர்வதால் தனது திருமணத்தின் அறிவிப்பை இன்று அறிவித்துள்ளார்.
மும்பையை சேர்ந்த தொழிலதிபர் கெளதம் கிச்சலு என்பவரை மணக்கிறார்.
இது தொடர்பான செய்திகளை நம் தளத்தில் பார்த்தோம்.
இவர்களின் திருமணம் அக்டோபர் 30 ஆம் தேதி மும்பையில் நடைபெற உள்ளது.
கொரோனா பிரச்சினை நீடித்து வருவதால் இவர்களின் திருமணத்தில் இரு வீட்டாரின் உறவினர்கள் மட்டுமே பங்கேற்பார்கள் என கூறப்படுகிறது.
கௌதம் கிச்சலு யார்? அவரின் தொழில் என்ன.?
வீடுகளில் டிசைனிங் அறைகளை தயார் செய்து கொடுப்பது, விதவிதமான மின் விளக்குகளை டிசைன்களை வடிவமைப்பாராம் கௌதம்.
கெளதம் கிச்சலு டிசைன்களுக்கு உலக அளவில் வரவேற்பு இருப்பதால், மும்பையின் பிரபலமான நபர்களின் வீடுகளை சிறப்பாக வடிவமைத்துக் கொடுத்து வருகிறாராம்.
Actress Kajal Aggarwal to tie knot with entrepreneur Gautam Kitchlu on october 30