தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சதிஷ் இயக்கத்தில் அகில் – லாவண்யா நடித்துள்ள படம் ‘ரேசர்’.
பாண்டியன் ஸ்டோர்ஸ் டிவி சீரியலில் முல்லை என்ற கேரக்டர் நடித்து புகழ்பெற்றவர் லாவண்யா என்பது குறிப்பிடத்தக்கது.
ஏப்ரல் 7ஆம் தேதி ‘ரேசர்’ படம் வெளியாக உள்ள நிலையில் படக் குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.
அப்போது ஹீரோயின் லாவண்யா பேசியது…
நான் டிவிக்கு வருவதற்கு முன்பே எனக்கு இப்படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்தார் இயக்குனர் சதீஷ். இந்த படம் ரொம்ப நன்றாக இருக்க காரணம் இயக்குனர் தான். ஹீரோ அகில் சந்தோஷ் என்னுடன் நட்பாக பழகினார்.” என்றார்.
ஹீரோ அகில் சந்தோஷ் பேசியது:*
இப்படத்தின் இயக்குனர் கனவு ரொம்பபெரியது, அதை தயாரிப்பாளர்கள் நிறைவேற்றியிருக் றார்கள்.எல்லோரும் கடுமையான உழைத்திருக்கிறோம். ரேஸர் பற்றிய கதை என்றாலும் அப்பா மகன் உறவை எதார்த்தமாக இக்கதை கூறும், எல்லோரும் அந்த்தந்த வேடத்தில் ஒன்றி நடித்திருக்கிறார்கள்.” என்றார்.
*தயாரிப்பாளர் கார்த்திக் ஜெயாஸ் பேசியது:*
நான் சிறுவயதாக இருக்குபோதே என் தந்தை இறந்துவிட்டார், அதன்பிறகு கஷ்டப்பட்டு படித்தேன். ஓட்டல் வேலை முதல் எல்லா வேலையும் செய்து, பிறகு வியாபாரம் செய்து தற்போது ஒரு தயாரிப்பாளராக இங்கு நிற்கிறேன். ரேஸர் படம் எல்லோரையும் கவரும் படமாக இருக்கும்.” என்றார்.
மேலும் ஆக்ஷன் ரியாக்ஷ்ன் ஜெனிஸ், பைக்ரேஸ் சாமியன் ரஜினி கிருஷ்ணன், பி ஆர் ஒ சங்க தலைவர் டைமண்ட் பாபு, கேபிள் சங்கர், நடிகர் ராஜா, சிறுபட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர்
ஆர்.கே.அன்புச்செல்வன், காத்து கருப்பு கலை ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள்.
actress Lavanya speech at racer movie press meet