தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கடந்த சில தினங்களுக்கு முன்பு காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்தார் நடிகை குஷ்பு.
பாஜக.வில் இணைந்த பின் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் பேசும்போது.. மனநலம் குன்றிய (காங்கிரஸ்) கட்சியில் இருந்து விலகி விட்டதாக தெரிவித்தார்.
இது மனநலம் குன்றிய மாற்றுத் திறனாளிகளை அவதூறு செய்யும் சொல் என்றும் குஷ்பு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மாற்று திறனாளிகளுக்கான அமைப்புகள் புகார்கள் அளித்தன.
இதை தொடர்ந்து குஷ்பு மன்னிப்பு கேட்டு அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில்…
அவசரம், ஆழ்ந்த வருத்தம், மற்றும் வேதனையான ஒரு தருணத்தில் நான் சில வார்த்தைகளை பயன்படுத்தியதற்காக மிகவும் வருந்துகிறேன். நான் எனது சொந்த குடும்பத்திலேயே மனநல பிரச்சினையால் போராடி இருக்கிறேன். மனச்சோர்வு, மன நலம் குன்றிய நண்பர்களோடு வாழ்கிறேன்.
மக்களின் பன்முக தன்மையை உணர்ந்தவள் நான். மாற்றுத் திறனாளிகளை எப்போதும் மதிப்பவள் நான். என அறிக்கையில் தெரிவித்துள்ளார் குஷ்பூ.
Actress / Politician Khushboo issues apology over ‘mentally retarded’ remark