தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
உலக சினிமா ரசிகர்களை தன் கவர்ச்சியால் கிறங்கடித்தவர் நடிகை சன்னி லியோன்.
இவர் ஒரு முறை கேரளா வந்த போது பிரபலமான திருச்சூர் பூரம் திருவிழாவை மிஞ்சும் அளவுக்கு கூட்டம் கூடியது.
ஓரிரு மலையாள படங்களிலேயே இதை கிண்டலடித்து வசனங்கள் வந்துள்ளன.
தமிழ் சினிமாவில் வடகறி என்ற படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியிருக்கிறார் சன்னி.
மலையாளத்தில் மம்மூட்டி உடன் ‘மதுர ராஜா’ படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியிருக்கிறார் சன்னி லியோன்.
மேலும் ‘ரங்கீலா’ மலையாளப் படத்தில் நடித்தார்.
இந்நிலையில், Shero (ஷீரோ) என்ற சைக்கலாஜிகல் த்ரில்லர் படத்தில் நடிக்க அவர் ஒப்பந்தமானார் சன்னி.
இந்த படத்தை ஸ்ரீஜித் விஜயன் இயக்குகிறார்.
இந்த படம் மலையாளத்தில் உருவாகி, தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் டப் செய்யப்பட உள்ளது.
இந்த நிலையில் இப்பட சூட்டிங்குக்காக கேரளா வந்திருக்கும் சன்னி லியோன் தனது இன்ஸ்டாகிராமில் பியூட்டி ஆஃப் கேரளா என (இயற்கை பின்னணி) தன் போட்டோ ஒன்றையும் பகிர்ந்துள்ளார்.
Actress Sunny leone to play lead role in malayalam thriller movie Shero