தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
திரிஷா நடிக்கும் “தி ரோட்” திரைப்படத்தின் புதிய மேக்கிங் டீஸர் முதல் முறையாக இணையதளத்தில் தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், உள்ளிட்ட ஐந்து மொழிகளில் வெளியானது.
நடிகை திரிஷாவின் திரைப்பயணத்தில் “தி ரோட்” திரைப்படம் மிகப்பெரியப் பொருட் செலவில் உருவாக்கப்பட்டுள்ளது.
பொன்னியின் செல்வன் இருபாகங்களுக்குப் பிறகு “தி ரோட்” திரைப்படத்தை நடிகை திரிஷா பெரிதும் எதிர்பார்ப்பதாக அவர் நட்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
AAA சினிமா பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் அருண் வசீகரன் இயக்கத்தில் “திரிஷா” மற்றும் “சார்ப்பட்டா” புகழ் டான்சிங் ரோஸ் “சபீர்”, சந்தோஷ் பிரதாப், மியா ஜார்ஜ், எம்.எஸ். பாஸ்கர், வேலராமமூர்த்தி, விவேக் பிரசன்னா ஆகிய நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் திரைப்படம் “தி ரோட்”.
மேலும் இப்படத்திற்கு சாம்.C.S இசையமைத்துள்ளார். K.G. வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
“தி ரோட்” திரைப்படம் மதுரையில் நடந்த சில உண்மை சம்பவங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது என படத்தின் இயக்குனர் அருண் வசீகரன் தெரிவித்துள்ளார்.
மேலும் இப்படத்திற்காக நடிகை “திரிஷா” மற்றும் படக்குழுவினர் அனைவரும் மதுரை மற்றும் அதைச் சுற்றியுள்ள மலைகள், காடுகள் என மிக கடுமையான இடங்களுக்கு சென்று படப்பிடிப்பு மேற்க்கொண்டுள்ளதாக படக்குழு தெரிவித்தன.
மேலும் இப்படத்தின் மோஷன் போஸ்டர் கடந்த தீபாவளி அன்று வெளியாகி திரிஷா ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.
இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவை திரை பிரபலங்கள் முன்னிலையில் மிக பிரம்மாண்டமாக நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது.
மேலும் இத்திரைப்படம் வருகின்ற ஜூன் மாதம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Get ready to be mesmerized by the Movie “The Road” 🔥 and we bring you an exclusive behind the look scenes!
🎶 👉🏻 – https://www.youtube.com/watch?v=1JD2pYZUCmw
#TheRoad
#HBDSouthQueenTrisha
#HBDTrisha
@trishtrashers
@Actorsanthosh @actorshabeer
@Arunvaseegaran1 @actorvivekpra
@SamCSmusic
@tipsofficial @idiamondbabu @akash_tweetz
Actress Trisha Podum’s ‘The Road’.; Screen celebrities getting ready to participate