தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ரஜினி படம் ரிலீசாகிதான் பல சாதனைகளை படைக்கும் என்பதில்லை.
அப்படம் வருவதற்கு முன்பே, பல வினோத நிகழ்வுகளையும் நிகழ்த்த தவறுவதில்லை.
தளபதி படம் வெளியான சமயத்தில் அப்படத்தின் பெயரில் சோப் முதல் பனியன், ஜட்டி என அனைத்தும் விற்பனைக்கு வந்தது.
இதனைத் தொடந்து பாட்ஷா, படையப்பா, பாபா ஆகிய படங்களில் பெயர்களிலும் வியாபார பொருட்கள் வந்தன.
இந்நிலையில் தற்போது உலக திரையுலக வரலாற்றில், எந்த ஒரு படத்திற்கும் கிடைக்காத புகழ் ரஜினியால் கபாலி படத்திற்கு கிடைத்துள்ளது.
இப்படத்தின் ஏர்லைன் பார்ட்னராக ஏர் ஆசிய விமான நிறுவனம் இணைந்துள்ளதை எமது தளத்தில் படித்திருப்பீர்கள்.
தற்போது ‘கபாலி’ ரிலீஸ் தினத்தில் சிறப்பு விமானங்களை இயக்க முடிவு செய்துள்ளதாம் இந்நிறுவனம்.
காலை 6.00க்கு பெங்களூரில் இருந்து புறப்படும் ‘கபாலி சிறப்பு விமானம்’ 7.00க்கு சென்னை வந்தடையும்.
அன்றைய தினமே மாலை 3 மணிக்கு சென்னையில் இருந்து கிளம்பும் அதே விமானம் 4 மணிக்கு பெங்களூர் சென்றடையும்.
இந்த டிக்கெட்டில் அனைத்தும் அடங்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.
அதாவது கபாலி படத்தின் டிக்கெட், ஆடியோ சிடி, காலை உணவு, மதிய உணவு, ஸ்நாக்ஸ், குளிர்பானங்கள் மற்றும் சென்னை விமான நிலையத்தில் இருந்து தியேட்டருக்கு சென்று வர வாகன வசதி என அனைத்தும் அடங்கும் என தெரிவித்துள்ளனர்.
இப்படத்திற்காக டிக்கெட்டின் விலை ரூ.7,860 மட்டுமே என அறிவிக்கப்பட்டுள்ளது.