தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ரஜினியின் மூத்த மகளும் தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா அவர்கள் ‘3‘ என்ற படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார்.
இதே படத்தின் மூலம்தான் அனிருத்தும் இசையமைப்பாளராக அறிமுகமானார்.
இப்படத்தில் இடம் பெற்ற ஒய் தி கொல வெறி என்ற பாடல் உலகம் முழுக்க பிரபலமாக இந்த படம் நன்றாக ஓடியது.
இதனையடுத்து ‘வை ராஜா வை’ என்ற படத்தை இயக்கினார் ஐஸ்வர்யா தனுஷ்.
இந்த படங்களை தொடர்ந்து சினிமாவில் தங்கள் உயிரையே பணயம் வைத்து போராடும் சண்டைக் கலைஞர்களுக்காக ‘சினிமா வீரன்’ என்ற ஆவணப்படத்தை இயக்கினார்.
அது இன்னும் வெளியாகவில்லை.
இதனைத் தொடர்ந்து அதிரடியாக பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற மாரியப்பன் வாழ்க்கையை படமாக இயக்கவுள்ளதாக அறிவித்தார்.
ஆனால் அது என்ன ஆனதோ..? அதுவும் முடங்கிவிட்டது.
இந்நிலையில் தற்போது புதிதாக ஒரு பேய் படத்தை இயக்கவுள்ளாராம்
இப்படத்தை கணவர் தனுஷ் தயாரிக்கவுள்ளார்.
தற்போது நடிகர், நடிகைகளின் தேர்வு நடைபெற்று வருகிறது. எனவே விரைவில் முழு அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.
Aishwarya Dhanush next direction movie updates