தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நேர்கொண்ட பார்வை படத்தை தொடர்ந்து அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் வலிமை.
இந்தப் படத்திலும் அஜித் – டைரக்டர் வினோத் – தயாரிப்பாளர் போனி கபூர் கூட்டணி தொடர்கிறது.
நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய யுவன் சங்கர்ராஜா இசையமைத்து வருகிறார்.
இதன் சூட்டிங் ஹைதராபாத் மற்றும் சென்னையில் நடைபெற்று வந்த நிலையில் கொரோனா ஊரடங்கு உத்தரவால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது.
படத்தின் தலைப்பு மட்டுமே வெளியான நிலையில் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை அஜித் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்தனர்.
மே 1 நாளை அஜித்குமாரின் பிறந்தநாளை முன்னிட்டு படக்குழுவினர் அப்டேட்ஸ் கொடுப்பார்கள் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருந்தனர்.
இந்த நிலையில் வலிமை பட தயாரிப்பாளர் போனி கபூர் அதிரடியாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் கூறப்பட்டிருப்பதாவது,
“கோவிட் 19 என்னும் கொரோனா என்கிற கொடிய நோயின் தாக்கத்தில், அகில உலகமே போராடிக் கொண்டு இருக்கும் இந்த தருணத்தில் எங்கள் நிறுவனம் தயாரிக்கும் எந்த படத்துக்கும் எந்த விதமான விளம்பரமும் செய்ய வேண்டாம் என்று எங்கள் நிறுவனத்தில் பணியாற்றும் நடிகர், நடிகையர் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள் ஆகியோரை கலந்து ஆலோசித்து, ஒருமித்தக் கருத்தோடு முடிவெடுத்து உள்ளோம் என்பதை தெரிவித்து கொள்கிறோம். அதுவரை தனித்து இருப்போம், நம் நலம் காப்போம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
Ajith fans upset with Boney Kapoors statement