தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
இவர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் இயக்கிய கனா திரைப்படம் விமர்சன ரீதியிலும், வசூல் ரீதியிலும் நல்ல வரவேற்பை பெற்றது.
தெலுங்கிலும், கவுசல்யா கிருஷ்ணமூர்த்தி என்ற பெயரில் ரீமேக் ஆகி ஹிட்டானது.
தற்போது, அடுத்த படத்தை இயக்குவதற்காக பிசியாக இருக்கிறார் அருண்ராஜா காமராஜ்.
இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலின், நாயகனாக நடிக்கவுள்ளார் என தகவல்கள் வந்துள்ளன.
நடிகை ஸ்ரீ தேவியின் கணவரும் தயாரிப்பாளருமான போனிக் கபூர் இந்த படத்தை தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
அஜித் நடித்த நேர் கொண்ட பார்வை மற்றும் தற்போது நடித்துவரும் வலிமை ஆகிய படங்களை போனி கபூர் தான் தயாரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Ajith movie Producer team up with Arunraja Kamaraj and Udhayanidhi