அஜித் வர ஒவ்வொரு சீனும் இடியாய் இருக்கும்… எடிட்டர் ரூபன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிவா இயக்கத்தில் அஜித்குமார், காஜல் அகர்வால், விவேக் ஓபராய் அக்ஷராஹாசன், கருணாகரன் ஆகியோர் நடித்துள்ள விவேகம் படம் வருகிற ஆகஸ்ட் 24 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.

அனிருத் இசையமைப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் பாடல்கள் நேற்று வெளியாகி ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது.

இப்படம் குறித்து படத்தொகுப்பாளர் ரூபன் பேசுகையில்…

”’விவேகம்’ படம் முழுவது கைதட்டி கொண்டாடக்கூடிய, ஒரு உண்மையான, பிரம்மாண்டமான சர்வதேச உளவு படம்.

திரையில் அஜித் சார் தோன்றும் ஒவ்வொரு பிரேமும் பலத்த இடியை போல் மிக வலுவாக இருக்கும். அவரது அசுர உழைப்பை கண்டு வியந்தேன். அவ்வளவு சிறப்பாக அவர் செய்துள்ளார்.

அவர் இப்படத்தில் செய்திருக்கும் ஆபத்தான சண்டை காட்சிகள் பார்ப்பவர்கள் வாயை பிளந்து பார்க்கும் வகையில் இருக்கின்றது.

இப்படத்தின் ‘தலை விடுதலை’ பாட்டின் காட்சியமைப்பு ‘ஆலுமா டோலுமா’ பாடலை விட பத்து மடங்கு ரசிகர்களுக்கு விருந்தாக இருக்கும். அஜித் சாரின் ரசிகர்களுக்கும் , பொதுவான சினிமா ரசிகர்களுக்கும் ‘விவேகம்’ ஒரு மாபெரும் கொண்டாட்டமாக நிச்சயம் இருக்கும்.

இயக்குனர் சிவா சாருடன் பணிபுரிவது அற்புதமான அனுபவம். எங்கள் இருவருடைய சிந்தனை போக்கில் நிறைய ஒற்றுமை இருப்பதால் எனது பனியை மேலும் திறம்பட செய்யமுடிகிறது. அ

வர் என் மேல் வைக்கும் நம்பிக்கை எனக்கு மேலும் உழைக்க தூண்டுதலாக இருக்கின்றது. இது ஒரு பிரம்மாண்ட ஆக்ஷன் படமாக இருந்தாலும் இதில் வரும் கணவன் மனைவி காட்சிகள் மிக அழகாக படமாக்கப்பட்டுள்ளது.

‘விவேகம்’ ரசிகர்களுக்கு ஒரு மிகப்பெரிய விருந்தாக இருக்கும் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை.’ என்கிறார் ரூபன்.

Ajith scenes will be like a Thunder says Vivegam editor Ruben

பெண்களை புரிந்துக்கொள்ள ஆண்கள் படும் அவஸ்தையே தரமணி.. – ராம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இளம் சினிமா ரசிகர்கள் மத்தியில் பலம் வாய்ந்த பெண் கதாபாத்திரத்துடன் தைரியமாக, வெளிப்படையாக பேசும் படங்களும் என்றுமே வரவேற்பை பெறும்.

ராம் இயக்கத்தில், JSK பிலிம் கார்பொரேஷன்ஸ் தயாரிப்பில், ஆண்ட்ரியா மற்றும் வசந்த் ரவியின் நடிப்பில் யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் வரும் ஆகஸ்ட் 11ஆம் தேதி ரிலீஸ் ஆகும் ‘தரமணி’ இது போன்ற தற்கால ஆண் பெண் உறவு முறை, காதல் பற்றியும் இப்பொழுதுள்ள கலாச்சாரம் பற்றியும் பேசும் படமாகும்.

இது குறித்து இயக்குனர் ராம் பேசுகையில்…

”அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவன் நான். எனது சுற்றுப்புறத்தில் வசிக்கும் இளைஞர்கள், அவர்களது வாழ்க்கை முறை மற்றும் அவர்களது கலாச்சாரம் ஆகியவற்றில் நான் கண்ட விஷயங்களின் எனது புரிதலிலும் கண்ணோட்டத்திலும் உருவாகிய கதை தான் ‘தரமணி’.

உலகமயமாக்கத்தால் தமிழ் பெண்களுக்கு மேலும் சுதந்திரமும் தன்னம்பிக்கையும் கிடைத்திருக்கிறது.

நவீன சிந்தனைகளுக்கும் பழமைவாத சிந்தனைகளுக்கும் இடையே சிக்கிக்கொண்டு தவிக்கும் தற்போதய ஆண் வர்கம் தங்கள் காதலி/மனைவியை புரிந்துகொள்வதில் சந்திக்கும் சிரமங்கள் பற்றி ‘தரமணி’ படத்தில் பேசியுள்ளேன்.

இது தகவல் தொழில்நுட்ப ஊழியர்களின் வாழ்க்கை முறையை பற்றிய படம் மட்டுமே என்பது உண்மையல்ல.

‘தரமணி’ பல கலாச்சாரம், பல்வேறு பின்னையிலிருந்து சென்னைக்கு வந்து வாழும் இளைஞர்கள் பற்றிய பொதுவான படம். எல்லா இளைஞர்களின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் படமாக ‘தரமணி’ இருக்கும்” என்றார் இயக்குநர் ராம்.

Taramani movie talk about Apartment life and current culture says Ram

பிக்பாஸை தோற்கடிக்க வரும் நம்ம விவசாயம்; மக்கள் ஆதரிப்பார்களா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நம்ம மூவீஸ்’ என்ற நிறுவனம் சார்பில் ஆர்.கே. தயாரிக்க, அன்பரசன் இயக்கத்தில் ‘நம்ம விவசாயம்’ என்ற பாடல் மற்றும் குறும்படம் ஒன்றை உருவாக்கியிருக்கிறார்கள்.

சி.சத்யா இசையமைத்திருக்கும் இந்த பாடல் மற்றும் காட்சி தொகுப்பு வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது.

இந்த அமைப்பின் அடுத்தடுத்த திட்டங்களை குறித்த ஒரு அறிமுகமும் இதோ:

தமிழ் நாட்டில் குறு விவசாயிகள் மட்டும் 82 சதவீதம் இருக்கிறார்கள். சொந்த முயற்சியில் அரசின் ஆதரவு இல்லாமலேயே விவசாயம் செய்து வருகிறார்கள்.

இவர்களுக்கு அரசின் மானியமும் கிடைப்பதில்லை. ‘ நம்ம விவசாயம்’ என்ற அமைப்பின் மூலம் விவசாயிகளுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும்.

விவசாயத்தையும், விவசாயிகளையும் ஆதரிக்க துவங்கப்பட்ட அமைப்பு ‘நம்ம விவசாயம்’.

இந்நிகழ்ச்சியில் இசை அமைப்பாளர் சத்யா பேசும்போது, ‘‘விவசாயம் இப்போதிருக்கும் சூழலில் அதைப்பற்றிய செய்திகளை பார்த்து வருத்தப்பட்டுக் கொண்டே இருந்தேனே தவிர, என்னால் எதையும் அதற்காக செய்ய முடியவில்லை.

அந்த நேரத்தில் தான் ‘நம்ம விவசாயம்’ பாடலுக்கு இசையமைக்க வாய்ப்பு கிடைத்தது. நானும் ஒரு சிறு துரும்பாக இருந்திருக்கிறேன் என்பதை நினைக்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. என்னை நானே பரிசோதித்துக் கொண்ட உணர்வு கிடைத்தது’’ என்றார்.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ‘லொள்ளு சபா’ ஜீவா பேசும்போது, ‘‘நம்ம விவசாயம்’ விழிப்புணர்வு நிகழ்வு பாராட்டப்பட வேண்டிய விஷயம்.

இங்கு திரையிடப்பட்ட குறும்படத்தை என்னால் ரசிக்க முடியவில்லை, இந்த உணர்வுபூர்வமான விஷயத்தை மனதால் உணர்கிறேன். விவசாயம் இணையத்தில் இளைஞர்கள் மூலம் அதிகம் விவாதிக்கப்படுகிறது.

அது இணையத்தை தாண்டி வர வேண்டும். விவசாயத்தை தனியாக காப்பாற்ற முடியாது. ஒட்டு மொத்த அமைப்பும் மாறி, ஆட்சி மாற்றம் நடந்து, நல்ல தலைமை அமைந்தால் தான் மாற்ற முடியும். விவசாயிகள் உற்பத்தி செய்யும் உணவுப் பொருட்கள் நேரடியாக மக்களிடம் போய் சேர வேண்டும்.

விவசாயமும் சினிமாவும் கூட ஒரே நிலையில் தான் இருக்கின்றது. சரியான கட்டமைப்பு இல்லை. இரண்டிலுமே இடைத்தரகர்கள் தான் பயனடைகிறார்கள். இது மாறவெண்டும்’’ என்றார்.

‘‘அரசாங்கம் செய்ய வேண்டிய மிகப்பெரிய வேலையை ஆர்.கே மற்றும் 4 பேர் சேர்ந்து செய்ய இருக்கிறார்கள்.

65 நாட்கள் விவசாயிகள், மற்ற துறையினர், பிரபலங்களை ஒரு இடத்தில் அடைத்து வைத்து விவசாயம் பற்றிய ஒரு நிகழ்வை செய்ய இருக்கிறோம்.

நல்ல நோக்கத்துக்காக செய்வதால் தனியாக எந்த ஒரு தொலைக்காட்சியையும் நாங்கள் அணுகவில்லை.

இது மக்களை சென்று சேர வேண்டும் என்பதே முக்கிய நோக்கம்’’ என்றார் இந்த குறும்படத்தை இயக்கியிருக்கும் அன்பரசன்!

இந்த படத்திற்கு பாடல் எழுதியிருக்கும் கிருதயா பேசும்போது, ‘‘இந்த ஆல்பத்திற்கு இசையமைக்க இசைஞானி இளையராஜாவை அணுகினோம். 6 மாதம் அவருக்காக காத்திருந்தும் அவரின் தொடர் அலுவல்களால் அவரால் இசையமைக்க முடியவில்லை.

உடனடியாக இளையராஜாவால் பாராட்டப்பட்ட சி.சத்யாவை இசையமைக்க ஒப்பந்தம் செய்தோம். அவரின் இசை தான் இந்த குறும்படத்திற்கு ஜீவன்’’ என்றார்.

Namma Vivasayam team plans to beat Bigg Boss show

யாரு செய்றீங்கன்னு தெரியும்; இதான் இறுதி எச்சரிக்கை… சீறும் சிம்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிக்பாஸ் ஓவியா விஷயத்தில் தன் பெயரை கெடுக்க சிலர் முயற்சி செய்வதாக சிம்பு ஓர் அறிக்கை வெளியிட்டு இருந்தார் என்பதை பார்த்தோம்.

மேலும் உண்மைக்கு புறம்பான விஷயத்தை ஊடகங்கள் பெரிது படுத்தக்கூடாது எனவும் அதில் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இதுதவிர தன் ட்விட்டர் பக்கத்தில் ஓர் எச்சரிக்கை அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் பதிவிட்டுள்ளதாவது… இந்த போலி செய்திக்கு பின் யார் இருக்கிறார்கள் என்பது தெரியும். இதான் இறுதி எச்சரிக்கை.

இதுபோல் மீண்டும் தொடர்ந்தால், வித்தியாசமான வழியில் வித்தியாசமான பதில் வரும். சைத்தானை வெளியில் எடுத்துவிடாதீர்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

STR‏Verified account @iam_str
I know who’s behind this fake news. Final warning, if you still? Different reply in a very different way. Don’t unleash the god of a devil.

பன்றி காய்ச்சலால் அவதிப்படும் அமீர்கான்-கிரண் ராவ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பாலிவுட் நடிகர் அமீர்கான் மற்றும் அவரது மனைவி கிரண் ராவ் ஆகியோர் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

புனேவில் ஒரு நிகழ்ச்சியில் அமீர் கான் மற்றும் அவரது மனைவி பங்கேற்பதாக இருந்தது.

ஆனால் அவர்கள் கலந்துக் கொள்ளவில்லை. இதுகுறித்து ஒரு வீடியோ பதிவில் அமீர்கான் பேசியதாவது…

எனக்கும் என் மனைவிக்கும் பன்றிக் காய்ச்சல் வந்துள்ளது.

மற்றவர்களுக்கு அது பரவக் கூடாது என்பதால் நாங்கள் எந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை.

வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெற்று வருகிறோம்.” என்று தெரிவித்துள்ளார்.

அமீர்கானின் 2வது மனைவி கிரண் ராவ் என்பது குறிப்பிடத்தக்கது.

Aamirkhan and his wife kiran rao suffering from Swine Flu

பொறுப்பற்றவர்கள் ஓகே; நீங்க செய்யலாமா.? மீடியாவுக்கு சிம்பு வேண்டுகோள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சமூக ஊடகங்களில் சினிமா நட்சத்திரங்களின் பெயரில் போலியான அக்கவுண்டுகளை தயாரித்து அதன் மூலம் போலியான தகவல்கள் மற்றும் கருத்துக்களை வெளியிட்டு அந்த நட்சத்திரங்களுக்கு களங்கம் விளைவிக்க ஒரு கூட்டம் இருப்பது அனைவரும் அறிந்த விஷயமே.

தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஓவியாவை திருமணம் செய்ய சிம்பு விருப்பம் தெரிவித்து அவரது ட்விட்டர் பதிவில் கருத்து தெரிவித்ததாக சமீபத்தில் ஒரு செய்தி நிலவியது என்பதை பார்த்தோம்.

இது குறித்து சிம்பு பேசுகையில்…

”எனது பெயரை களங்கப்படுத்த சிலர் துடிக்கின்றனர் என்ற செய்தி எனக்கொன்றும் புதிதல்ல. இவற்றையெல்லாம் மீறி வெற்றி காண்பவன் நான்.

ஆனால் நான் தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஒரு நடிகையை பற்றி தனிப்பட்ட ட்வீட் ஒன்றை போட்டேன் என்பது முற்றிலும் பொய்யான, உண்மைக்கு மாறான, எனது மனதை புண்படவைக்கும் செய்தி.

பொறுப்பற்ற சிலர் எனது பெயரில் போலியான சமூக ஊடக அக்கௌன்ட் மூலம் இது போன்று ட்வீட் செய்வது எனக்கு ஆச்சிரியமளிக்கவில்லை,

ஆனால் இந்த உண்மையற்ற, போலியான செய்தியை சில ஊடகங்கள் நம்பி, அதனை வெளியிடுவது எனக்கு மிகவும் வருத்தமளிக்கிறது. எந்த ஒரு ஊடகத்துக்கும் உண்மையான செய்தியை பொறுப்புடன் தருவதே முதன்மை காரியமாக இருக்க வேண்டும் என்பதை நம்புபவன் நான்.

இது போல் என் பெயரால் போலியாக உருவாக்கப்பட்டுள்ள அக்கௌண்ட்டுகளால் பரப்பப்படும் செய்திகளை நம்பவேண்டாம் என்றும் எனது தரப்பிலிருந்து அதிகாரபூர்வமாக வரும் அறிவிப்புகளை மட்டுமே வெளியிடுமாறு அனைத்து ஊடக நண்பர்களை பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்”. என தெரிவித்துள்ளார்.

Simbu aka STR request media do not spread rumours

 

More Articles
Follows