தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
லைக்கா நிறுவனம் தயாரிப்பில் ஷங்கர் இயக்கி வரும் படம் ’2.0’.
ஏஆர் ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக எமி ஜாக்சன் நடித்து வருகிறார்.
வில்லனாக பாலிவுட் நடிகர் அக்ஷய்குமார் நடித்து வருகிறார்.
இந்நிலையில் இப்பட அனுபவங்களை சமீபத்தில் தெரிவித்திருந்தார் அக்ஷய்குமார். அதில்…
“ரஜினிக்கு வில்லனாக நடிப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. நான் அடிவாங்கிவது ஒரு சூப்பர் ஸ்டாரிடம் என்பதால் இப்படி உணர்கிறேன்.
ரஜினி சார் என்ன செய்தாலும் அது ஸ்டைல்தான்.
ஒருமுறை நான் ரஜினி சார், ஷங்கர் சார் மற்றும் படக்குழுவினர் ஒரு இடத்தில் இருந்தோம்.
ரஜினி சார் அவர் கால் மீது கால் போட்டு ஸ்டைலாக அமர்ந்திருந்தார். அப்போது தன் சட்டை மேல் இருந்த தூசியை தட்டிவிட்டார்.
அவர் தட்டிவிட்டது கூட ஸ்டைல்தான். அதை அனைவரும் ரசித்தனர்.
ஆனால் அதுபோல் நான் செய்தபோது யாரும் கண்டு கொள்ளவில்லை.
அதுபோல் ஷங்கர் அவர்களை பற்றியும் சொல்ல வேண்டும்.
அவர் டைரக்டர் அல்ல. சயின்ஸ்ட். ஏதாவது ஒரு புதுமைகளை கண்டுபிடித்துக் கொண்டே இருக்கிறார்.” என்றார் அக்ஷய்குமார்.