தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
கடந்த 2018ல் ஹிந்தியில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் ‘அந்தாதுன்’.
ஸ்ரீராம் ராகவன் இயக்கிய இப்படத்தில் ஆயுஷ்மன் குரானா, ராதிகா ஆப்தே, தபு நடித்திருந்தனர்.
சூப்பர் ஹிட்டான இப்படம் 3 தேசிய விருதுகளைப் பெற்றது.
இப்படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை நடிகர் பிரசாந்தின் தந்தை தியாகராஜன் வாங்கியுள்ள நிலையில் கடந்தாண்டு கிறிஸ்துமஸ் தினத்தில் இப்பட அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.
‘அந்தகன்’ என்று இப்படத்திற்கு தமிழில் தலைப்பு வைத்துள்ளனர்.
பிரசாந்த் ஜோடியாக சிம்ரன் நடிக்க, முக்கிய கேரக்டரில் கார்த்திக் நடிக்கிறார்.
ஜெ.ஜெ.பெஃட்ரிக் இயக்க சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். பட்டுக்கோட்டை பிரபாகர் வசனம் எழுதுகிறார்.
இந்த நிலையில் மலையாளத்திலும் இந்த படம் ரீமேக் செய்யப்படுகிறது.
பிரபல ஒளிப்பதிவாளர் ரவி கே சந்திரன் இப்படத்தை இயக்க பிருத்விராஜ் நாயகனாக நடிக்கிறார்.
ராதிகா ஆப்தே கேரக்டரில் ராஷி கண்ணா நடிக்கவுள்ளார்.
தெலுங்கு ரீமேக்கில் நிதின், தமன்னா நடிக்கின்றனர்.
Andhadhun 3 language remake updates