தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கடந்த 2018-ம் ஆண்டு அக்டோபர் மாதம் ஹிந்தியில் வெளியான படம் ‘அந்தாதுன்’.
இத்திரைப்படம் 3 தேசிய விருதுகளைப் பெற்றது.
ஸ்ரீராம் ராகவன் இயக்கிய இப்படத்தில் ஆயுஷ்மன் குரானா, ராதிகா ஆப்தே, தபு உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
நடிகர் பிரசாந்தின் தந்தை தியாகராஜன் அப்பட ரீமேக் உரிமையை பெரும் தொகை கொடுத்து வாங்கியிருந்தார்.
பிரசாந்த் & சிம்ரன் & கார்த்திக் நடிக்கின்றனர்.
ஜெ.ஜெ.பெட்ரிக் இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்துக்கு சந்தோஷ் சிவன் இசையமைக்கிறார்.
பட்டுக்கோட்டை பிரபாகர் வசனம் எழுதுகிறார்.
இப்படத்தின் டைட்டில் ஜனவரி 1-ம் தேதி அறிவிக்கப்படவுள்ளதாம்.
இரண்டு நிமிடங்கள் 12 நொடி நீளமுள்ள வீடியோ வெளியிட்டு இந்த டைட்டில் தகவலை வெளியிட்டுள்ளனர்.
இந்த வீடியோவில் பியானோ வாசித்தபடி பிரசாந்த் அமர்ந்திருக்கிறார்.
நடிகர் பிரசாந்த் லண்டன் டிரினிடி இசைக் கல்லூரி மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Andhadhun title look on Jan 1st