வேலைக்காரனுக்காக அனிருத் தந்த 2 இன் 1 சர்ப்ரைஸ் இதுதான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா இணைந்து நடித்து வரும் வேலைக்காரன் படத்தை 24AM Studios நிறுவனம் தயாரித்து வருகிறது.

இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

இந்நிலையில் 2 இன் 1 சர்ப்ரைஸ் ஒன்றை இன்று வெளியிடுவதாக அறிவித்திருந்தனர்.

அந்த வீடியோவை தற்போது வெளியிட்டுள்ளனர்.

அதில் அனிருத் பேசியதாவது…

கருத்தவனெல்லாம் கலீஜாம் பாடலுக்கு ரசிகர்கள் தந்த மிகப்பெரிய ஆதரவுக்கு நன்றி.

அடுத்து இறைவா என்ற பாடலை நவம்பர் 2ஆம் தேதி வெளியிடுகிறோம்.

இந்த பாடலில் 2 இன் 1 உள்ளது. இறைவா மற்றும் உயிரே.

அதாவது இரண்டு எமோசன்களை இணைத்துள்ளோம்.

வாழ்க்கையையும் காதலையும் அதில் சொல்லியுள்ளோம் என தெரிவித்துள்ளார்.

Anirudh revealed Velaikkaran movie 2 in 1 surprise

24AM STUDIOS®‏Verified account @24AMSTUDIOS 13m13 minutes ago
#2in1 Surprise from #Velaikkaran! #Iraiva+#Uyire Love & Life on 2nd No

https://twitter.com/24AMSTUDIOS/status/925346497977126912

மதுரையில் சூரி ஹோட்டலை திறக்கும் சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒரு சில ஹீரோக்களுக்கு மட்டுமே காமெடியனுடன் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகும்.

இதில் இன்றைய தலைமுறை நடிகர்களில் சிவகார்த்திகேயன்-சூரி ஜோடியை குறிப்பிட்டு சொல்லலாம்.

இவர்கள் கூட்டணியில் வந்த வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன் உள்ளிட்ட படங்கள் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது.

சினிமாவைத் தாண்டியும் இவர்களது நட்பு நிஜ வாழ்க்கையிலும் தொடர்ந்து வருகிறது.

இந்நிலையில் நடிகர் சூரி, தன் குடும்பத்தினருக்காக மதுரையில் ஒரு ஹோட்டல் திறக்கவிருக்கிறாராம்.

அந்த ஹோட்டலை நாளை சிவகார்த்திகேயன் திறந்து வைக்கிறார் என கூறப்படுகிறது.

Sivakarthikeyan going to open Sooris hotel at Madurai

சூப்பர் ஸ்டார் இடத்திலேயே மாஸ் காட்டும் விஜய்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் நடிக்கத் தொடங்கி இந்திய ரசிகர்களின் சூப்பர் ஸ்டாராக விஸ்வரூபம் எடுத்தவர் ரஜினிகாந்த்.

இதனால் அவரது சொந்த மாநிலமான கர்நாடகாவில் ரஜினி படங்களுக்கு பெரும் வரவேற்பு இருக்கும்.

இந்நிலையில் கர்நாடகாவில் ரஜினியின் தமிழ் பட சாதனைகளை இதுவரை எந்த தமிழ் படமும் முறியடிக்கவில்லை என கூறப்படுகிறது.

ஆனால், தற்போது கபாலி படைத்த சாதனையை விஜய்யின் மெர்சல் படம் முறியடித்துள்ளதாக சொல்லப்படுகிறது.

கர்நாடகாவில் மெர்சல் மட்டும் இதுவரை 12 கோடி வசூலித்துள்ளதாம்.

Mersal record break collection in Karnataka

ஏஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய்க்கு ரெண்டு ஜோடி.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மெர்சல் படத்தை தொடர்ந்து ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ளார்.

இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க, இதன் சூட்டிங் வருகிற ஜனவரியில் தொடங்கவிருக்கிறது.

பிரபல மலையாள ஒளிப்பதிவாளர் கிரிஷ் கங்காதரன் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார் என்பதை பார்த்தோம்.

இதில் ரகுல் பிரித்தி சிங் நாயகியாக நடிக்கவுள்ளார்.

இந்நிலையில் மற்றொரு நாயகியாக சோனாக்ஷி சின்ஹா நடிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவர் ரஜினியுடன் லிங்கா படத்தில் டூயட் பாடியவர்.

மேலும் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கிய இந்திப் படமான அகிரா படத்திலும் சோனாக்ஷி நடித்திருந்தார் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

Rakul Preeti and Sonakshi Sinha  likely to team up with Murugadoss for Vijay 62

2018ல் ரஜினி-கமல்-விக்ரம்-சூர்யா இவர்களுக்கு 2; அஜித்-விஜய்க்கு மட்டும் 1

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவை பொறுத்தவரை ரஜினி-கமலுக்கு அடுத்த இடத்தை விஜய், அஜித் பிடித்துள்ளனர்.

இவர்களோடு விக்ரம், சூர்யா ஆகியோரும் தங்களுக்கான இடத்தை பிடித்துள்ளனர்.

இந்த 6 ஹீரோக்களும் முக்கியமாக கருதப்படும் நிலையில் இவர்களின் படங்கள் ஒரே ஆண்டில் வெளியானால் எப்படி இருக்கும்?

அதுவும் ஒவ்வொரு நடிகருக்கும் 2 படங்கள் வெளியானால், தமிழ் சினிமாவிற்கு அந்த ஆண்டு நிச்சயம் கொண்டாட்டமான ஆண்டாகத்தான் இருக்குமல்லவா?

தற்போது அந்த மகிழ்ச்சியான செய்தியைத்தான் பார்க்கப் போகிறோம்.

ரஜினி நடித்துள்ள 2.0 மற்றும் காலா ஆகிய 2 படங்களும் அடுத்த 2018ல் வெளியாகும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தேதிகள் இன்னும் உறுதியாகவில்லை.

அதுபோல் கமல்ஹாசன் நடித்துள்ள விஸ்வரூபம் 2 மற்றும் சபாஷ் நாயுடு ஆகிய 2 படங்களும் 2018ல் ரிலீஸ் ஆகிறது.

இவர்களைப்போல் விக்ரம் நடித்து வருகின்ற துருவ நட்சத்திரம் மற்றும் ஸ்கெட்ச் ஆகிய 2 படங்களும் 2018ல் வெளியாகவுள்ளன.

சாமி 2 (சாமி ஸ்கொயர்) படமும் இந்தாண்டில் வெளியானால் ஆச்சரியப்படுவதற்கில்லை.

சூர்யா நடித்துள்ள தானா சேர்ந்த கூட்டம் 2018 பொங்கலுக்கும் அடுத்து நடிக்கவுள்ள செல்வராகவன் படம் 2018 தீபாவளிக்கும் ரிலீஸ் என தெரிவித்துள்ளனர்.

இந்த 4 ஹீரோக்களும் தலா 2 படங்களை கொடுக்கவுள்ளனர்.

ஆனால் விஜய் மற்றும் அஜித் ஒரு படங்களையாவது நிச்சயம் கொடுப்பார்கள் எனத் தெரிகிறது.

ஏஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ள படம் 2018ல் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

அதுபோல் அஜித்தின் ஏதாவது ஒரு படம் 2018ல் வெளியாகும் என நம்பலாம்.

இதுவரை அஜித் யார் இயக்கத்தில் நடிக்கப் போகிறார்? என்பதே கன்ப்யூஸ்னாகத்தான் உள்ளது என்பது வேறு கதை.

Tamil cinema 6 top stars have movie release in year 2018

இந்தியளவில் 2.0 பட ரிலீஸ் ஏற்படுத்திய குழப்பம்; சரி செய்யுமா லைகா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லைகா நிறுவனத்திற்காக ஷங்கர் ரூ. 400 கோடியில் உருவாக்கியுள்ள படம் 2.0.

ரஜினிகாந்த், அக்ஷ்ய்குமார், எமிஜாக்சன் உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படத்தின் இசை சமீபத்தில் துபாய் நாட்டில் வெளியிடப்பட்டது.

இப்படம் 2018 ஜனவரி 26 தேதியன்று வெளியாகும் என்று முன்னரே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

ஆனால், கடந்த சில நாட்களாக ‘2.0’ படத்தின் வெளியீடு ஏப்ரல் மாதம் தள்ளிப் போய்விட்டதாக தகவல்கள் வெளியாகின.

அதற்கு முக்கிய காரணம் 2.0 படத்தின் வில்லன் அக்சய்குமார் நடித்துள்ள மற்றொரு ஹிந்தி படமான ‘பேடு மேன்’ (PAD MAN) என்ற படம்தான்.

இப்படமும் அதே ஜனவரி 26ல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டதால் புதிய குழப்பம் ஏற்பட்டது.

ரஜினிகாந்த்திற்கு இந்தியளவில் மிகப்பெரிய மாஸ் உள்ளதால், அவரது படங்கள் வெளியாகும் நாளில் மற்ற படங்களை வெளியிட தயாரிப்பாளர்கள் தயங்குவார்கள்.

எனவே ரஜினியின் படம் தள்ளிப்போனால், நாம் நம் படத்தை வெளியிடலாமா? என்று ஆலோசிக்க ஆரம்பித்து விட்டனர் மற்ற தயாரிப்பாளர்கள்.

மேலும் கோடை விடுமுறை சமயத்தில் தங்கள் படங்களை வெளியிடலாம் என சில தயாரிப்பாளர்கள் நினைத்த்திருந்த நிலையில் 2.0 படம் அப்போது வெளியானால் தம் படம் பாதிக்கப்படுமே என்ற மற்றொரு குழப்பமும் உருவாகிவிட்டதாம்.

இதனால் சம்பந்தப்பட்ட 2.0 படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக ரிலீஸ் தேதியை அறிவித்தால் அனைவரது குழப்பமும் தீர்ந்துவிடுமே என்பது திரையிலகினரின் எதிர்பார்ப்பாகும்.

More Articles
Follows