தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தமிழ்த் திரைப்பட உரிமையாளர் சங்கத்தின் முன்னாள் தலைவரான (லேட்) அண்ணாமலை-க்கு மரியாதை தரும் விதமாக, அவரின் திருவுருவப்படத்தை “அபிராமி” ராமநாதன் திறந்து வைத்தார்.
ரோகினி திரையரங்கு வளாகத்தில் நடைபெற்ற விழாவில் கலைப்புலி.S. தாணு பேசியதாவது,
என்னால் எப்படி, D.R அவர்களை மறக்க முடியாதோ, அதே போல் அண்ணாமலை அவர்களையும் மறக்க முடியாது.
அண்ணாமலை அவர்களின் சிறப்பு என்னவென்றால், அதிகம் பேச மாட்டார். ஆனால், நினைத்த காரியத்தை கட்சிதமாக செய்து முடிப்பார். மிகவும் தன்மையான மனிதரும் கூட. அப்படி பட்ட இழப்பு திரையரங்கு உரிமையாளர்களுக்கும், திரையுலகிற்கும் ஈடு செய்யமுடியாத இழப்பு.
அவரின் படத்திறப்பு விழாவில் கலந்துகொண்டு, அவருக்கு சிறப்பு செய்தது எனக்கு நெகிழ்வான ஒரு நிகழ்வாகும். இவ்விழாவை ஏற்பாடு செய்து தந்த பன்னீர் செல்வம் சாருக்கும், கஜேந்திரனுக்கும், ஸ்ரீதருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். என்றார்.