தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள 2.0 படத்தை ரூ. 400 கோடியில் தயாரித்து வருகிறது லைகா நிறுவனம்.
ரஜினியுடன் எமி ஜாக்சன், அக்ஷய்குமார் நடிக்க ஏஆர். ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.
இப்படத்தை அடுத்த ஆண்டு 2018 ஜனவரி 25ஆம் தேதி வெளியிட உள்ளனர்.
இந்நிலையில் இதன் ஆந்திரா மற்றும் தெலங்கானா வெளியீட்டு உரிமை மிகப்பெரிய தொகைக்கு விற்கப்பட்டுள்ளதாக லைகா நிறுவனத்தின் ராஜூ மகாலிங்கம் அறிவித்துள்ளார்.
இதை குளோபல் சினிமா நிறுவனம் பெரிய தொகைக்கு வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.