தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
இந்த வெற்றியால் மகிழ்ச்சியின் உச்சத்தில் இருக்கும் ஆரா சினிமாஸ் காவியா வேணுகோபால் கூறும்போது, “எங்களுக்கு ஒரு மிகப்பெரிய ஆச்சரியம்! எல்லா இடங்களிலும் இருந்து பார்வையாளர்களிடமிருந்து கிடைக்கும் அபரிமிதமான வரவேற்பை கண்டு நாங்கள் முழுமையாக பிரமித்து கொண்டிருக்கிறோம். விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் என இரு தரப்பிலும் இருந்து தொலைபேசியில் அழைத்து படத்துக்கு கிடைத்திருக்கும் வரவேற்பை பற்றி சிலாகித்து பேசுகிறார்கள். அவர்களது வாய்மொழி பாராட்டை விடவும், இந்த படத்திற்காக 50 காட்சிகள் மற்றும் 25 திரையரங்குகள் அதிகரித்துள்ளன என்பதில் பெருமிதம் கொள்கிறோம். பொதுவாக, முதல் வாரத்தில் படம் பார்ப்பவர்களின் எண்ணிக்கை, முதல் மூன்று நாட்களை விட குறைவாக தான் இருக்கும். ஆனால், இங்கு அது தினம் தினம் அதிகரித்து வருவதை பார்த்து ஆச்சரியப்படுகிறோம். திரைப்படத்தின் கருப்பொருளும், சாம் ஆண்டன் அதை வணிக ரீதியான முறையில் கொடுத்ததும் மிகச்சிறப்பாக, படத்துக்கு சாதகமாக அமைந்திருக்கிறது. கூடுதலாக, அதர்வா முரளியின் திரை ஆளுமையும் படத்துக்கு மதிப்பு சேர்த்திருக்கிறது. எல்லாவற்றிற்கும் மேலாக, படத்தின் உணர்வுபூர்வமான அம்சங்கள் குடும்ப ரசிகர்களை மிகப்பெரிய அளவில் ஈர்த்திருக்கிறது” என்றார்.
சாம் ஆண்டன் இயக்கிய ‘100’ திரைப்படத்தை ஆரா சினிமாஸ் சார்பில் காவியா வேணுகோபால் தயாரித்திருந்தார். ஜிகுரு ஸ்ரீ மிஸ்ரி எண்டர்பிரைசஸ் சார்பில் சிஎஸ் பதம்சந்த் ஜெயின், தமிழ்நாடு முழுக்க இந்த திரைப்படத்தை வெளியிட்டார்.