தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
வருகிற அக்டோபர் 12ஆம் தேதி ரெட்டச்சுழி டைரக்டர் தாமிரா இயக்கியுள்ள ஆண் தேவதை படம் வெளியாகிறது.
ஜிப்ரான் இசையமைத்துள்ள இப்படத்தில் சமுத்திரக்கனி, ரம்யா பாண்டியன், சுஜா வருணி, பேபி மோனிகா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இப்படத்தில் நடித்துள்ளவர்கள் தங்கள் அனுபவங்களை பகிர்ந்துள்ளனர்.
நடிகர் இளவரசு பேசும்போது, “பத்து ஆண்டுகளுக்கு முன் ஒரு இலக்கிய எழுத்தாளரான தாமிராவிடம் ஒரு வாச்கராகத்தான் அறிமுகம் ஆனேன். இலக்கியங்காளின் பிறப்பிடமாக திகழும் தாமிரபரணி கரையில் பிறந்த தமிரா சிறந்த இலக்கியவாதியாக திகழ்வதில் எந்த ஆச்சர்யமும் இல்லை. அவருடைய ரெட்டச்சுழி படத்திலும் நடித்திருந்தேன்..
இந்த ஆண் தேவதையில் என்னுடையது வழக்கம்போல காமெடி கதாபாத்திரம் என்றாலும் அதிலும் ஒரு மெசேஜ் இருக்கும்.” என்கிறார்.
நடிகர் காளி வெங்கட் பேசும்போது, “இந்தப்படத்தில் எனக்கு ஒரே ஒருநாள் தான் ஷூட்டிங் இருந்தது. ஒரே நாளில் அதிகமான காஸ்ட்யூம் மாற்றி நடித்தது நானாகத்தான் இருக்கும்.
ஆணாதிக்கத்துடன் இருக்கிற ஒருத்தன் அப்படியே உல்டாவாக வீட்டோடு மாப்பிளையாக மாறிப்போகின்ற ஒரு கேரக்டரில் நடித்திருக்கிறேன். கொஞ்ச காட்சிகள் தான் என்றாலும் படத்தில் நான் பேசுகிற வசனங்கள் பஞ்ச் வசனங்களாக இருக்கும்.
முக்கிய வேடத்தில் நடித்துள்ள நடிகர் அபிஷேக் பேசும்போது, “இந்தப்பட வாய்ப்பு எனக்கு அதிர்ஷ்டத்தால் கிடைத்தது. அதேசமயம் முறையாக ஆடிஷனில் கலந்துகொண்டு அதன்மூலம் தான் தேர்வானேன். சமுத்திரக்கனி சாருடன் சேர்ந்து பணியாற்ற நீண்ட நாளாக ஆசைப்பட்டு வந்தேன்.
அது நிறைவேறி விட்டது. இதுவரை அடிதடி முரட்டு வில்லனாக வந்த நான் இந்தப்படத்தில் ஐடி நிறுவனத்தின் ஓனராக ரொம்பவே ஸ்டைலிஷான கேரக்டரில் நடித்துள்ளேன்” என்றார்.
படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கும் மோனிகா, கவின் பூபதி இருவரை பற்றியும் படக்குழுவினர் ஒருவர் விடாமல் மாற்றி மாற்றி புகழ்கின்றனர். ஒரு காட்சியில் அழுதபடி நடிக்கவேண்டும் என்றால் கிளிசரின் போடாமலே, தனியாக அமர்ந்து அதற்கான மூடை உருவாக்கி நடித்து ஆச்சர்யப்படுத்தியுள்ளார் மோனிகா. அதுமட்டுமல்ல டப்பிங் பேசும்போதும் அதே உணர்வை மீண்டும் அச்சு பிசகாமல் பிரதிபலித்துள்ளாராம்.
படம் பற்றி சுட்டிப்பெண் மோனிகா கூறும்போது, “நிறைய அப்பாக்கள் ஆண் தேவதை தான். பெற்றோர்கள் குழந்தைகளுக்கு நல்லது எது கெட்டது எது என சொல்லிக்கொடுத்து வளர்க்கணும்.
இந்தப்படம் பார்க்கும்போது பல அப்பாக்கள் தங்களது தவறுகளை நிச்சயம் திருத்திக்கொள்வார்கள்” என்கிறார் மழலைத்தனம் மாறாத முதிர்ச்சியோடு.
மாஸ்டர் கவின்பூபதியும் அப்படித்தான்… குழந்தைத்தனம் மாறாத ஆனால் பக்குவப்பட்ட அவனது பேச்சும் நடிப்பும் படக்குழுவினரை ரொம்பவே ஆச்சர்யப்படுத்தியதாம். மேலே இருந்து கீழே விழும் ஒரு காட்சியில் தைரியமாக நடித்து அசத்தியுள்ளான் கவின் பூபதி. குழந்தை நட்சத்திரங்களிலேயே இவன் கொஞ்சம் ப்ரெஷ்ஷா தெரிவான் என்கிறார்கள்.
படத்தின் இயக்குனர் தாமிரா படம் குறித்து பேசும்போது…
“ஏதோ ஒருவிதத்தில் நாம் நம்மையோ நம்மை சுற்றி இருப்பவர்களையோ ஏமாற்றி ஒரு வாழ்க்கை வாழவேண்டி இருக்கிறது. என் மனைவி ஒருமுறை என்னிடம் பேச்சு வாக்கில் நாம் ஏன் இந்த பெருநகரத்தில் வாழ்கிறோம், நாம் வாழ்வதற்காக சம்பாதிக்கிறோமா இல்லை சம்பாதிப்பதற்காக வாழ்கிறோமா என்கிற கேள்வியை எழுப்பினார்.
நெருக்கடியான தருணத்தில் அவர் கேட்ட அந்த கேள்வி ரொம்பவே முக்கியமாக பட்டது. அந்த சமயத்தில் தான் ‘பர்ஷ்யூட் ஆப் ஹேப்பிநெஸ்’ என்கிற படம் பார்த்தேன். அதன் தூண்டுதலிலும் இந்த பெருநகர வாழ்க்கையின் பாதிப்பிலும் தான் இந்த ஆண் தேவதை படம் உருவானது.
பொதுவாக இங்கே பெண்களைத்தான் தேவதையாக சொல்கிறோம். தேவதை என்பது உயர்ந்த குணம்.. உயர்ந்த பண்பு.. அப்படி உயர்ந்த குணம் உள்ள ஆணும் ஒரு தேவதையாக இருக்கலாம் என்பதைத்தான் இதில் சொல்லியிருக்கிறோம்” என்கிறார்.
வரும் அக்-12ஆம் தேதி இந்தப்படம் ரிலீஸாகிறது.