தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
இந்தியாவில் உள்ள அனைத்து தனியார் டிவிக்களின் ரேட்டிங்கை BARC ‘பார்க்’ அமைப்பு நிர்வகித்து வருகிறது.
ஒவ்வொரு வாரமும் எந்த டிவிக்கு, எந்த நிகழ்ச்சிக்கு மக்களிடம் வரவேற்பு உள்ளது என்பதை அந்த அமைப்பு வெளியிட்டு வருகிறது.
இந்த நிலையில் மும்பையில் உள்ள முக்கிய சேனல்கள் டிஆர்பி முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
வருமானத்தையும் பெருக்கும் நோக்கில் அவர்கள் செயல்பட்டதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக 5 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
அதாவது… பார்வையாளர்கள் மற்றும் விளம்பரதாரர்களைக் கவரும் நோக்கில் ஏழை மக்கள் வாழும் பகுதிகளில் சேனல்களை எந்நேரமும் ஆன் செய்தே வைத்திருப்பதற்கு மாதம் ரூ.400 முதல் ரூ.700 தொகை வழங்கப்பட்டு வந்துள்ளதாம்.
இந்த டிஆர்பி மோசடி காரணமாக அடுத்த 12 வாரங்களுக்கு அனைத்து மொழிகளிலும் செய்தி சேனல்களுக்கான டிஆர்பி ரேட்டிங் வாரந்தோறும் வெளியிடுவது தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது” எனத் பார்க் அமைப்பு தெரிவித்துள்ளது.
BARC pauses weekly ratings for TV channels