தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
கடந்த 2010ஆம் ஆண்டில் ராஜேஷ் இயக்கத்தில் ஆர்யா, சந்தானம், நயன்தாரா ஆகியோர் நடித்த படம் ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’.
மேலும் லக்ஷ்மி ராமகிருஷ்ணன், சுப்பு பஞ்சு, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்டோரும் நடித்திருந்தனர்.
இந்தப் படத்தின் வெற்றிக்கு முக்கிய தூணாக விளங்கியவர் நடிகர் சந்தானம்.
ஆர்யா நயன்தாரா காதல் மற்றும் ஆர்யா சந்தானத்தின் காமெடி இந்தப் படத்தை ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் கொண்டு சேர்த்தது.
இந்தப் படத்தின் வெற்றிக்கு பிறகு தான் ராஜேஷ் இயக்கத்தில் உதயநிதி ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ என்ற படத்தில் நடிக்க முடிவு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தற்போ தற்போது 14 ஆண்டுகளுக்குப் பிறகு ‘பாஸ் என்ற பாஸ்கரன்’ படத்தில் இரண்டாம் பாக எடுக்கப் படக்குழு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.
வருகிற செப்டம்பர் மாதத்தில் இதன் படப்பிடிப்பு தொடங்கும் என சமீபத்திய பேட்டில் ஒன்று சந்தானம் தெரிவித்து இருந்தார்.
Boss Engira Baskaran part 2 shoot updates