தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
தமிழ் சினிமாவில் எண்ணற்ற நட்சத்திரங்கள் இருந்தாலும் சிலரது பெயர் கூட நாம் நினைவுக்கு வராது.. சிலரது பெயர்கள் கூட நமக்கு தெரியாது.
அவர்கள் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருந்தாலும் சின்ன சின்ன கேரக்டரில் மட்டுமே வந்து கொண்டு இருப்பார்கள்.
இவரை அந்த படத்தில் பார்த்திருக்கிறோம். இந்த படத்தை பார்த்திருக்கிறோமே என்று பலர் சொல்வதைக் கேட்டு இருப்போம்.
அப்படியான ஒரு நடிகர் தான் பாவா லட்சுமணன். லிங்குசாமி இயக்கிய ‘ஆனந்தம்’ படத்தில் மம்முட்டி வீட்டில் வேலை செய்யும் பவா லட்சுமணன் என்றால் பலருக்கும் நிச்சயம் அறிந்திருக்கும்.
அதுபோல வடிவேல் உடன் பல படங்களில் நடித்திருக்கிறார். ‘எல்லாம் அவன் செயல்’ படத்தில் வக்கீல் வண்டு முருகனுக்கு ஜூனியர் அட்வகேட்டாக இவரும் அல்வா வாசுவும் நடித்திருந்தனர்.
இந்த நிலையில் தற்போது பாவா லட்சுமணன் சர்க்கரை நோயால் அவதிப்பட்டு ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அவருடைய ஒரு காலில் கட்டை விரல் மற்றும் அதற்கடுத்த இரண்டு விரல்கள் அகற்ற வேண்டிய கட்டாயத்தில் விரல்கள் எடுக்கப்பட்டு விட்டது. இன்னொரு காலிலும் கட்டை விரல் எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறாராம்.
திருமணம் செய்துக் கொள்ளாமலேயே பேச்சிலர் வாழ்க்கை வாழ்ந்து வரும் லட்சுமணன், சினிமாவில் பல படங்களில் புரொடக்ஷன் மேனேஜராகவும் பணியாற்றியுள்ளார்.
லட்சுமணனை நேரில் சந்தித்து மேற்கொண்டு சிகிச்சைக்காக அனைத்து உதவிகளையும் செய்துள்ளார் சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம்.
சினிமா பிரபலங்கள் பலர் அவரை பார்த்து வருகிறார்கள். பார்த்தவர்கள் சொல்வது, ” பாவா லட்சுமணன் கள்ளம், கபடம் இல்லாத குழந்தையாக பேசி சிரிக்கிறார். சில நெருக்கமானவர்களை பார்க்கும்போது பொங்கி அழுது விடுகிறாராம் லட்சுமணன்.
அவர் விரைவில் நலம் பெற்று மீண்டும் சினிமாவுக்கு திரும்பி நம்மை நகைச்சுவையால் மகிழ்விக்க காத்திருப்போம்..
Comedy Actor Bava Lakshmanan treatment updates