தனுஷ் ஏன் அப்படி சொன்னார்..? தீராத குழப்பத்தில் ரசிகர்கள்

தனுஷ் ஏன் அப்படி சொன்னார்..? தீராத குழப்பத்தில் ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

dhanushதமிழ் சினிமா நடிகர்களில் அதிகமான ட்விட்டர் பாலோயர்களை வைத்திருப்பவர் நடிகர் தனுஷ்.

கிட்டதட்ட 36 லட்சத்திற்கும் அதிகமானோர் இவரை ட்விட்டரில் பின் தொடர்ந்து வருகின்றனர்.

இவரும் இவரது கருத்துகளை அவ்வப்போது பதிவிட்டு வருகிறார்.

இந்நிலையில் சில நிமிடங்களுக்கு முன்பு மிகப்பெரிய அறிவிப்பு விரைவில்… யோசியுங்கள்… என பதிவிட்டு சென்றுவிட்டார்.

ஆனால் அவரது ரசிகர்களோ அது என்னவாக இருக்கும் என தீராத குழப்பத்தில் உள்ளனர்.

விரைவில் இதற்கான விடையை அவரே ட்விட்டரில் அறிவிப்பார் என எதிர்பார்க்கலாம்.

announcement soon. Guess what.

மூன்றெழுத்து மந்திரத்தை உடைத்த ‘சிவகார்த்திகேயன்-விஜய்சேதுபதி’

மூன்றெழுத்து மந்திரத்தை உடைத்த ‘சிவகார்த்திகேயன்-விஜய்சேதுபதி’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sivakarthikeyan and vijay sethupathiதமிழ் சினிமாவின் காலகட்டங்களை டாப் ஹீரோக்களை வைத்து பிரித்துவிடலாம்.

என்.எஸ்.கே காலம் தொட்டு இதுவே நடைமுறையாக இருந்து வருகிறது.

அவருக்கு பிறகு எம்.ஜி.ஆர்-சிவாஜி காலம் என்று சொல்லலாம்.

இந்த ஹீரோக்களின் பெயர்கள் பெரிதாக இருந்தாலும் பெரும்பாலும் இவர்களின் பெயர்கள் மூன்றெழுத்தில் அடங்கிவிடுகிறது.

அதன்பின்னர் இதுவே தொடர்கதையாகி விடுகிறது.

ரஜினி-கமல் என்று ஆரம்பித்து விஜய்-அஜித்-சூர்யா என தொடர்ந்து, அதன்பின்னர் தனுஷ்-சிம்பு என்று நீள்கிறது.

கிட்டதட்ட கடந்த 60 வருட தமிழ் சினிமாவுக்கு இந்து மூன்றெழுத்து ஹீரோக்கள் தானாகவே அமைந்தனர்.

ஆனால் தற்போது வளர்ந்து வரும் கலைஞர்களான சிவகார்த்திகேயன்-விஜய்சேதுபதி இருவரும் இதனை உடைந்து தெறிந்துள்ளனர் எனலாம்.

நீண்ட பெயர்களை இவர்கள் வைத்திருந்தாலும் தற்போது டாப் ஹீரோக்களின் வரிசையில் இவர்களின் பெயர்களும் இடம் பெற்றுள்ளது.

இனி இந்த பெயர் வரிசையில் தமிழ் சினிமாவின் காலகட்டம் அமைக்கப்படுமா? அல்லது மறுபடியும் மூன்றெழுத்து மந்திரம் தொடருமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

நிஜமாலுமே ‘கெத்து’ காட்டும் அஜித் ரசிகர்கள்

நிஜமாலுமே ‘கெத்து’ காட்டும் அஜித் ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vedalam ajithவருகிற நவம்பர் 10ஆம் தேதியுடன் அஜித் நடித்த வேதாளம் படம் வெளியாகி ஓராண்டு நிறைவடைகிறது.

இதற்காக ரோகினி திரையரங்கில் ரசிகர்களுக்கு சிறப்பு காட்சி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

முதலில் ஒரு காட்சி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அதன்பின்னர் ரசிகர்கள் பேராதரவு பெருக பெருக தற்போது நான்கு காட்சிகள் வரை நீடிக்கப்பட்டுள்ளது.

தற்போது ஜிகே சினிமாஸிலும் சிறப்பு காட்சிக்கு (மாலை 7.05 மணிக்கு) ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இன்னும் எத்தனை காட்சிக்கு ஏற்பாடு செய்யப்போகிறார்களோ…?

ரஜினியின் ‘2.ஓ’ சூட்டிங் நிறுத்தம்… யார் காரணம்.?

ரஜினியின் ‘2.ஓ’ சூட்டிங் நிறுத்தம்… யார் காரணம்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajini enthiranஷங்கர் இயக்கும் 2.ஓ படத்தில் ரஜினியுடன் எமி ஜாக்சன், அக்சய்குமார், ரியாஸ்கான் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

ரஜினிகாந்த் அமெரிக்கா சென்றதால், இதன் சூட்டிங் நிறுத்தி வைக்கப்பட்டது.

தீபாவளி விடுமுறைக்கு பின்னர் இப்படம் இன்று தொடங்குவதாக இருந்தது.

ஆனால் இன்றும் தொடங்கப்படவில்லை.

ஏனென்றால், தொழில்நுட்ப கோளாறு காரணமாக இன்னும் ஓரிரு நாட்களில் தொடங்கப்பட உள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

அப்போது, ரஜினி, எமி, சுதன்ஷ பாண்டே சூட்டிங்கில் கலந்து கொள்ள உள்ளனர்.

இது சென்னையில் உள்ள ஈவிபி யில் நவம்பர் 11ஆம் தேதி நடைபெற உள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

ஒரே படத்திற்காக விஜய்சேதுபதிக்கு கதை எழுதும் 5 இயக்குனர்கள்

ஒரே படத்திற்காக விஜய்சேதுபதிக்கு கதை எழுதும் 5 இயக்குனர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay sethupathiநீண்ட நாட்களாக கிடப்பில் கிடந்த விஜய்சேதுபதியின் மெல்லிசை படம் புரியாத புதிர் என்ற பெயர் மாற்றத்துடன் இம்மாதம் வெளியாகிறது.

இதனையடுத்து, இவரது ஓரிரு படங்கள் வெளியாகவுள்ள நிலையில், ‘ஆரண்ய காண்டம்’ படப்புகழ் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் நடிக்கவுள்ளார் விஜய்சேதுபதி.

இதில் சமந்தா, பஹத்பாசில் ஆகியோர் நடிக்க, பி.சி. ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்கிறார் என்பதை பார்த்தோம்.

இந்நிலையில் இப்படத்திற்கு மிஷ்கின் மற்றும் நலன்குமாரசாமி உள்பட ஐந்து முன்னணி இயக்குனர்கள் வசனம் எழுதவுள்ளதாக சொல்லப்படுகிறது.

வரும் ஜனவரியில் இதன் சூட்டிங் தொடங்கவுள்ளது.

ஆந்திராவை சுழற்றி அடிக்கும் ‘சிங்கம்’ சூர்யா

ஆந்திராவை சுழற்றி அடிக்கும் ‘சிங்கம்’ சூர்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

suriyaஹரி இயக்கும் எஸ்-3 படத்தில் சூர்யாவுடன் அனுஷ்கா, ஸ்ருதிஹாசன், விவேக், நாசர், ராதாரவி, ரோபா சங்கர் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

இப்படத்தின் மோசன் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. இதன் டீசரை நவம்பர் 7ஆம் தேதி வெளியிட உள்ளனர்.

படத்தை டிசம்பர் 16ஆம் தேதி ரிலீஸ் செய்யவுள்ளதை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.

இந்நிலையில் இப்படத்தின் தெலுங்கு சாட்டிலைட் உரிமை மட்டும் ரூ. 3.5 கோடிக்கு மேல் விற்கப்பட்டுள்ளதாம்.

இவை தவிர தெலுங்கு (ஆந்திரா + தெலுங்கானா) தியேட்டர்கள் ரிலீஸ் உரிமை மட்டும் ரூ. 20 கோடியை நெருங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

More Articles
Follows