தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘வாத்தி’ திரைப்படம் டிசம்பர் 2ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது அதன் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லுரி இயக்கத்தில் ‘வாத்தி’ படத்தில் நடித்துள்ளார் தனுஷ்.
இப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இதில் தனுஷுக்கு ஜோடியாக சம்யுக்தா மேனன் நடிக்க, சமுத்திரக்கனி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் தயாரிக்கும் இந்த படம் தெலுங்கில் ‘சார்’ என்ற பெயரில் உருவாகியுள்ளது.
தனுஷ் எழுதிய ‘வாத்தி’ படத்தின் முதல் பாடலான ‘வா.. வாத்தி’ பாடல் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில் டிசம்பர் 2 ரிலீஸ் தேதியை மாற்றி அடுத்த ஆண்டு 2023 பிப்ரவரி மாதம் 17-ம் தேதி வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பிப்ரவரி 17 நடிகர் சிவகார்த்திகேயனின் பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது.
dhanush film vaathi to release on sivakarthikeyan’s birthday