விஜய்-அஜித்தின் நண்பனாக நினைத்த என்னை தனுஷ் வளர்த்துவிட்டார் – சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சினிமாவை தாண்டியும் படு பிஸியாக நடிகராக மாறிவிட்டார் சிவகார்த்திகேயன்.

பல படங்களின் இசை வெளியீட்டு விழாவுக்கு வருகிறார். பல படங்களின் பர்ஸ்ட் லுக் முதல் டிரைலர், டீசர் ஆகியவற்றை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் அண்மையில் ஒரு கல்லூரி விழா ஒன்றில் கலந்துக் கொண்டுள்ளார். அப்போது அவர் பேசியதாவது…

டிவியில் இருந்து சினிமாவுக்கு வந்தபோது பெரிய ஹீரோ ஆவேன் என்ற எண்ணம் இல்லை.

விஜய், அஜித் போன்ற பெரிய ஹீரோக்களின் நண்பனாக சின்ன சின்ன வேடங்களில் கிடைத்தால் போதும் என்றே நினைத்தேன்.

சின்ன சின்ன ரோல்களை எதிர்பார்த்த எனக்கு எனக்கு தனுஷ், இயக்குனர் பாண்டிராஜ் ஆகியோர்தான் வாய்ப்புகள் வழங்கி வளர்த்து விட்டார்கள்.

ஆனால் இன்று யார் சினிமாவுக்கு வந்தாலும் சிவகார்த்திகேயன் போல வளர்ந்துவிடுவார்கள் என்று மற்றவர்கள் பேசுவதை கேட்கும்போது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது.” என்று பேசினார்.

உலகளவில் 3500 தியேட்டர்களை நெருங்கும் மெர்சல் ரிலீஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அட்லி-விஜய் கூட்டணியில் உருவாகியுள்ள மெர்சல் படம் பல தடைகளை கடந்து அக்டோபர் 18-ல் வெளியாகும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சில தியேட்டர்களில் இப்போதே முன்பதிவுகள் தொடங்கப்பட்டுவிட்டது.
இந்நிலையில், உலகமெங்கும் 3292 திரையரங்குகளில் ‘மெர்சல்’ படம் வெளியாகவுள்ளதாகவும் இது இது நிஜமாலுமே ‘மெர்சல்’ தீபாவளி”தான் என படத் தயாரிப்பு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீபாவளிக்கு இன்னும் ஒரு வாரம் உள்ள நிலையில் இந்த தியேட்டர் எண்ணிக்கை 3500ஐ தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விஷ்ணு ஒளிப்பதிவு செய்ய, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை தங்களது 100-வது படைப்பாக வெளியிடவுள்ளது.

மெர்சல் அப்டேட்ஸ்; தளபதி விஜய்யும் அந்த 55 நிமிடங்களும்….

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அட்லி இயக்கத்தில் விஜய், சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன், வடிவேலு, எஸ்.ஜே.சூர்யா, கோவை சரளா உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் மெர்சல்.

ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க, இப்படத்தை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் அதிக பொருட் செலவில் தயாரித்துள்ளது.

இந்நிலையில் விஜய்யை இளைய தளபதி என்றே ரசிகர்கள் அழைத்து வந்தனர். ஆனால் மெர்சல் பட போஸ்டர்களில் தளபதி என்ற வார்த்தை மட்டுமே இருந்தது.

எதற்காக அட்லி இதை மாற்றினார்? என்ற கேள்வி பல நாட்களாக ரசிகர்கள் மத்தியில் இருந்தது.

இந்நிலையில் ப்ளாஷ்பேக் காட்சியில் வரும் விஜய் கேரக்டருக்கு தளபதி என பெயரிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த தளபதி கேரக்டருக்கு ஜோடியாகதான் நித்யா மேனன் நடித்துள்ளார்.

இந்த காட்சிகள் மட்டும் 55 நிமிடங்கள் வருகிறதாம்.

Thalapathy name reason and Flashback scenes in Mersal movie

எமிஜாக்சன் ஸ்டில்லையும் 2.0 பாடல் தகவலையும் ஷங்கர் வெளியிட்டார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினிகாந்த், அக்‌ஷய்குமார், எமிஜாக்சன் ஆகியோர் நடித்து வரும் ‘2.0’ படத்தை லைகா புரொடக்‌ஷன் மிகப்பிரம்மாண்டாக தயாரித்துள்ளது.

ஷங்கர் இயக்கியுள்ள இப்படத்திற்கு நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்ய, ஏஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவினை வருகிற அக்டோபர் 27-ஆம் தேதி துபாயில் நடத்தவுள்ளனர்.

இதற்கு மட்டும் ரூ.12 கோடி பட்ஜெட்டை ஒதுக்கியுள்ளதாம் லைக்கா.

இந்நிலையில் சற்றுமுன் இன்று ஒரு பாடலை படமாக்கவுள்ளதாக ஷங்கர் தன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

அதில் எமிஜாக்சன் ரோபோட் உடையில் இருப்பது போன்று டிசைன் செய்துள்ளனர்.

Shankar revealed 2Point0 movie Amy Jackson poster with song updates

Shankar Shanmugham‏Verified account @shankarshanmugh 22m22 minutes ago
#2point0 song shoot starts today

நேற்று அனிருத்; இன்று யுவன்; சக்க போடு போடு(ம்) சிம்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர், இயக்குநர், பாடகர், பாடலாசிரியர் என பன்முகம் காட்டி வந்த சிம்பு முதன்முறையாக சக்க போடு போடு ராஜா என்ற படத்திற்காக இசையமைப்பாளராக அறிமுகமாகுகிறார்.

சேதுராமன் இயக்கியுள்ள இப்படத்தில் சந்தானம் ஹீரோவாக நடிக்க, விவேக், ரோபோ சங்கர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

சிம்புவின் நண்பர் விடிவி கணேஷ் தயாரித்துள்ளார்.

சில தினங்களுக்கு இப்படத்தில் அனிருத் பாடிய கலக்கு மச்சான் என்ற பாடல் புரோமோவை வெளியிட்டு அதன்பின் பாடலை வெளியிட்டனர்.

இப்போது மற்றொரு பாடலான ’காதல் தேவதை’ பாடலின் டீசரை வெளியிட்டுள்ளனர்.

இப்பாடலை வைரமுத்து எழுத யுவன்ஷங்கர் ராஜா பாடியுள்ளார்.

அண்மையில் சந்தானம் அறிமுக பாடல் காட்சியை படமாக்கியுள்ளனர்.

அதில் முதன்முறையாக ராஜு சுந்தரம், ஸ்ரீதர், தினேஷ், நோபல், ஜானி
ஆகிய 5 நடன இயக்குனர்கள் பணியாற்றியுள்ளனர்.

அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவு செய்ய படத்தொப்பை ஆன்டனி கவனித்து வருகிறார்.

நவம்பர் 14 தேதி சத்யம் திரையரங்கில் பிரமாண்டமான இசை விழா நடைபெற உள்ளது.

Simbu musical Sakka Podu Podu raja audio launch updates

 

https://www.youtube.com/watch?v=pLTv6VAJI_A

உலகத்தின் 3வது உயரமான ஹோட்டலில் 2.0 பட பிரஸ் மீட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்சய்குமார், எமி உள்ளிட்டோர் நடித்துள்ள 2.0 படத்தின் பாடல்கள் விரைவில் வெளியாகவுள்ளது என்பதை பார்த்தோம்.

இது துபாய் நாட்டில் உள்ள பர்ஜ் பார்க் என்னும் இடத்தில் அக்டோபர் 27ஆம் தேதி நடைபெற உள்ளது.

இந்நிகழ்வின் போது இப்பட இசையமைப்பாளர் ஏஆர். ரஹ்மான் மேடையில் இதன் பாடல்களை பாட போகிறாராம்.

இது இந்திய சினிமாவிலேயே இதுவரை யாரும் செய்யாத புதுமையான இசை வெளியீட்டு விழாவாக இருக்கும் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இதற்கு ஒரு நாள் முன்பு அதாவது அக்டோபர் 26ஆம் தேதி பிரஸ் மீட் ஒன்றை நடத்தவிருக்கிறார்களாம்.

இது Burj Al Arab Jumeirah என்ற இடத்தில் நடைபெற உள்ளதாம். இதுதான் உலகத்திலேயே 3வது உயரமான ஹோட்டல் என கூறப்படுகிறது.

இதனையடுத்து நவம்பர் 22ஆம் தேதி டீசரை ஹைதராபாத்தில் வெளியிட உள்ளனர் என தெரிய வந்துள்ளது.

More Articles
Follows