தனுஷ் உடன் மோதும் ஜி.வி. பிரகாஷ்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தனுஷ் தயாரிப்பில் அமலா பால் நடித்துள்ள படம் அம்மா கணக்கு.

இளையராஜா இசையில் உருவாகியுள்ள இப்படத்தை அஸ்வினி ஐயர் திவாரி இயக்கியுள்ளார்.

ஜூன் 17ஆம் தேதி இப்படத்தை வெளியிடவுள்ளனர்.

இதே நாளில் ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள ‘எனக்கு இன்னொரு பேர் இருக்கு’ படமும் வெளியாகும் என அறிவித்துள்ளனர்.

‘U/A’ சர்டிபிகேட் பெற்றுள்ள இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. சாம் ஆண்டன் இயக்கியுள்ளார்.

இப்படங்களைத் தொடர்ந்து சுந்தர் சி தயாரித்து நடித்துள்ள முத்தின கத்திரிக்கா படமும் வெளியாகிறது.

இதில் நாயகியாக பூனம் பஜ்வா நடிக்க, வேங்கட் ராகவன் இயக்கியுள்ளார்.

பீப் பாடலுக்கு வழக்கு தொடுத்தவர்கள் கமல் படத்திற்கும் வழக்கு…!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனமும் லைக்கா நிறுவனமும் இணைந்து சபாஷ் நாயுடு என்ற படத்தை தயாரிக்கின்றனர்.

ராஜீவ்குமார் இயக்கும் இப்படத்தில் கமலுடன் ஸ்ருதிஹாசன், ரம்யா கிருஷ்ணன், பிரம்மானந்தம் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

இதன் படப்பிடிப்பு அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் தமிழ்நாடு அருந்ததியர் முன்னேற்ற பேரவை பொதுச்செயலாளர் இளங்கோவன் அண்ட் வக்கீல் ஜெயபால் உள்ளிட்டோர் இப்படத் தலைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பான மனுவை கோவை மாவட்ட கலெக்டரிடம் கொடுத்துள்ளனர். அதில்…

“சபாஷ் நாயுடு என்ற தலைப்பு சமூக அமைதியை சீர்குலைக்கும் வகையில் உள்ளது.

இதுபோன்ற சாதி பெயரில் படத்தலைப்புகளை அனுமதித்தால் தவறான செயலுக்கு இதுவே முன்னுதாரணமாய் அமைந்து விடும்.

எனவே, இப்படத்திற்கு வேறு தலைப்பு இடும் வரை, இதன் விளம்பரங்களுக்கும் தடை விதிக்க வேண்டும்” என்று மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

இளங்கோவன் மற்றும் ஜெயபால் ஆகிய இருவரும் சிம்புவின் பீப் பாடலுக்கு எதிராக வழக்கு தொடுத்திருந்தனர் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

திருமணம் ஆனதால் அமலாபாலுக்கு அம்மா வேடமா..? தனுஷ் பதில்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தனுஷ் மற்றும் ஆனந்த் எல் ராய் இணைந்து தயாரித்துள்ள படம் அம்மா கணக்கு. இது ‘நில் பேட்டே சனாட்டா’ என்ற இந்தி படத்தின் ரீமேக் ஆகும்.
இளையராஜா இசையில் உருவாகியுள்ள இப்படத்தில் அமலா பால், ரேவதி, சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

அஸ்வினி ஐயர் திவாரி இயக்கியுள்ள இப்படம் ஜூன் 17ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.

இந்நிலையில் இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சற்றுமுன் சென்னையில் நடைபெற்றது.

அப்போது தனுஷ் கூறியதாவது…

“பெரும்பாலும் நான் தயாரிக்கும் பட விழாக்களில் கலந்து கொள்வதில்லை. ஆனால் இதில் கலந்து கொள்ள நினைத்தேன்.

இது நிச்சயம் மாறுபட்ட படமாக இருக்கும். இப்படம் தயாராகும் முன்பே, இதன் தமிழ் ரீமேக் உரிமையை எனக்கு வேண்டும் என கேட்டு பெற்றுக் கொண்டேன்.

இதில் நடிக்க அமலாவை கேட்டேன். கல்யாணம் ஆனவுடன் அம்மா வேடம் தர்றீங்களா? என்றார்.

பின்பு ஒப்புக்கொண்டார். நம் குடும்பத்திற்கும் சமூகத்திற்கும் தேவையான ஒரு படம். நிச்சயம் அனைவருக்கும் பிடிக்கும்.” என்றார் தனுஷ்.

ரஜினி ரசிகர்களை ஏமாற்றிய கபாலி குழுவினர்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள கபாலி விரைவில் வெளியாகவுள்ளது.

இதன் பாடல்கள்   ஜுன் 12ம் தேதி ரசிகர்கள் முன்னிலையில் வெளியாகும் என கூறப்பட்டது.

ஆனால் தற்போது இணையத்தில் வெளியிட இருக்கிறார்களாம்.

கபாலி குழுவின் இந்த முடிவால் ரஜினி ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

காதல் சுகுமார் இயக்கத்தில் நடிக்கும் ஆர்யாவின் சிஸ்டர்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பாலாஜி சக்திவேல் இயக்கிய காதல் படத்தில் பரத்தின் நண்பனாக நடித்தவர் சுகுமார்.

அன்று முதல் இவரது பெயருடன் காதலும் ஒட்டிக் கொண்டது. இதனை தொடர்ந்து பல படங்களில் பணியாற்றியுள்ள காதல் சுகுமார் தற்போது இயக்குனராகவும் வலம் வருகிறார்.

திருட்டு விசிடி என்ற படத்தை இயக்கிய இவர், தற்போது சும்மாவே ஆடுவோம் என்ற படத்தை இயக்கியுள்ளார்.

இப்படத்தில் நாயகனாக அறிமுக நாயகன் அர்ஜீன் மற்றும் அருண் பாலாஜி நடித்துள்ளனர்.

இதில் நாயகியாக லீமா பாபு நடித்துள்ளார்.

இவர் மதராசப்பட்டினம் படத்தில் ஆர்யாவின் தங்கையாக நடித்தவர் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்..

மேலும் மாங்கா, தாக்க தாக்க, ரெட்டைச்சுழி, ரசிக்கும் சீமானே ஆகிய தமிழ் படங்களிலும் லீமா நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதர்வாவுடன் இணையும் டிமான்ட்டி காலனி இயக்குனர்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஏழாம் அறிவு, துப்பாக்கி உள்ளிட்ட படங்களில் ஏஆர் முருகதாஸிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் அஜய் ஞானமுத்து.

இவர் அருள்நிதி நடித்த டிமான்ட்டி காலனி மூலம் இயக்குனராக அறிமுகமானார்.

தமிழில் இப்படம் பெற்றிபெறவே தெலுங்கிலும் இயக்கினார்.

தற்போது அதர்வா நடிக்கவுள்ள ஒரு புதிய படத்தை இயக்க ஒப்புக் கொண்டிருக்கிறாராம் அஜய்.

தற்போது ருக்மணி வண்டி வருது, செம போத ஆகாதே ஆகிய படங்களில் நடித்துள்ளார் அதர்வா.

வருகிற ஜனவரி 2017ல் பாலா இயக்கும் படத்தில் 5 நாயகர்களில் ஒருவராக நடிக்கவிருக்கிறார் அதர்வா என்பதும் தங்களுக்கு நினைவிருக்கலாம்.

More Articles
Follows