தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஜெயிலர்’.
இப்படத்தில் மோகன்லால், சிவராஜ்குமார், பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
‘ஜெயிலர்’ திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
பெரும் எதிர்பார்ப்பில் உருவாகியுள்ள இப்படத்தை பார்க்க ரசிகர்கள் திரையரங்குகளில் கூடி, மேளம் தாளம் அடித்து பாலபிஷேகம் செய்து கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில், ‘ஜெயிலர்’ படத்தின் முதல் நாள் முதல் காட்சியை நடிகர் தனுஷ் ரசிகர்களுடன் சென்னை ரோகினி திரையரங்கில் பார்த்துள்ளார்.
ரசிகர்களுடன் படம் பார்க்க வந்த தனுஷை ஆரவாரம் செய்து ரசிகர்கள் வரவேற்றனர்.
dhanush watched rajini’s jailer fdfs in chennai rohini theatre