தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நடிகர், ஒளிப்பதிவாளர் என தமிழக ரசிகர்களிடையே பிரபலமானவர் நட்டி என்ற நடராஜன்.
விஜய்யின் யூத், புலி உள்ளிட்ட படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
தமிழகத்தில் பரமக்குடியில் பிறந்த நட்டி, பாலிவுட் சினிமாவில் தான் தன் திரைப்பயணத்தை தொடங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கடந்த ஓரிரு தினங்களாக தன்னுடைய ட்விட்டர் பதிவில் பிரபல பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப்பை Anurag kashyab கடுமையாக சாடினார்.
அவர் ஒரு முட்டாள் என்றும் முட்டாள் எப்போதும் முட்டாளாகத் தான் இருப்பான் என பேசியிருந்தார்.
அனுராக் கஷ்யப் இயக்கத்தில் வெளியான பிளாக் ஃப்ரைடே படத்தின் ஒளிப்பதிவாளர் நட்டி. அதன் பிறகு இருவரும் இணையவில்லை.
இவர்கள் இருவரும் பாலிவுட்டில் பணிபுரிந்த மிகவும் நெருக்கமானவர்கள் என்பது பலரும் அறிந்ததே.
தற்போது இந்த விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சில பதிவுகளை வெளியிட்டுள்ளார் அனுராக்.
தவறு என்மீதே உள்ளது. நட்டி எனக்கு ஆசான் போன்றவர்.
என்னை தமிழ் சினிமாவுக்கு அறிமுகம் செய்து வைத்ததே நட்டி நட்ராஜ் தான்.
என்னை இயக்குநர் பாலாவிடம் அறிமுகப்படுத்தி வைத்தார். மேலும் அவர் தான் என்னை ரஜினி சாரை சந்திக்க வைத்தார்.
அவருக்கு உதவ வேண்டிய நேரத்தில் நான் அவருடன் இல்லாமல் போய்விட்டேன்.
நட்டி என்னை மன்னித்துவிடு…. என்று தனது ட்விட்டர் பக்கத்தில் மன்னிப்பு கேட்டுள்ளார் அனுராக்.
தமிழில் நயன்தாரா, அதர்வா, விஜய்சேதுபதி நடித்த இமைக்கா நொடிகள் படத்தில் மிரட்டல் வில்லனாக நடித்திருந்தார் அனுராக் காஷ்யப் என்பது குறிப்பிடத்தக்கது.
Director Anurag Kashyap says sorry to Actor Natty