தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சின்னக் கவுண்டர், எஜமான், கிழக்கு வாசல், சிங்கார வேலன் உள்ளிட்ட படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக அறியப்படுபவர் இயக்குநர் ஆர்வி.உதயகுமார்.
இந்தப் படங்களுக்கு இளையராஜா இசை அமைத்திருந்தார். இதில் இடம் பெற்ற பெரும்பாலான பாடல்களை எழுதி இருந்தார் உதயகுமார்.
நடிகர்கள் விஜயகாந்த், ரஜினிகாந்த், கமல்ஹாசன், கார்த்திக் ஆகியோருக்கு மேற்கண்ட படங்கள் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியது.
இந்தப் படங்கள் தமிழ் சினிமாவில் என்றும் மறக்க முடியாத எவர்கிரீன் படங்களாக அமைந்து விட்டன.
எனவே இயக்கம் மட்டுமின்றி தனது தனித்துவமான பாடல் வரிகளின் மூலம் பாடலாசிரியராகவும் கொண்டாடப்படுபவர்.
இவர் சமீப காலமாக நடிகராகவும் தனி முத்திரை பதித்து வருகிறார்.
பசங்க 2, அஞ்சல, தொடரி, தேவி உள்ளிட்ட படங்களில் நடிகராகவும் கலக்கியுள்ளார்.
தற்போது நல்ல கேரக்டர்களை தேர்வு செய்து நடித்தும் வருகிறார். மேலும் சின்ன பட்ஜெட் படங்களின் இசை விழா உள்ளிட்ட நிகழ்ச்சிக்கு வருகை தந்து அந்த படங்களுக்கு ஆதரவு கொடுத்து வருகிறார்.
அதுமட்டுமின்றி வளர்ந்து வரும் இயக்குனர்களுக்கும் ரோல் மாடலாகவும் இருந்து வருகிறார் ஆர்வி.உதயகுமார்.
Director RV Udhayakumar new movie updates