தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
ராகுல் இயக்கத்தில் மயில்சாமி மற்றும் ரேகா நாயர் நடித்திருந்த குறும்படம் ‘விளம்பரம்’.
இந்த குறும்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் இயக்குனர் A.ராகுல் பேசும்போது,
“இந்த படத்தை ஏழு எபிசோடுகள் கொண்ட ஒரு வெப்சீரிஸ் ஆக உருவாக்குவதற்கு தான் முதலில் திட்டமிட்டோம். ஆனால் இந்த முதல் பாகத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த இரண்டாவது நாளில் மயில்சாமி இவ்வுலகை விட்டு மறைந்து விட்டார்.
இதைத்தொடர்ந்து எவ்வாறு இந்த படத்தை முன்னெடுத்துச் செல்வது என்கிற தயக்கத்திலேயே சில நாட்கள் இருந்தோம். எடுத்தவரை இதை மட்டுமே ஒரு குறும்படமாக வெளியிடலாம், மக்கள் முன் கொண்டுபோய் சேர்த்து விடலாம் என தயாரிப்பாளராக என் தந்தை ஆலோசனை கூறினார்.
அவர் கொடுத்த நம்பிக்கையில் தான் இதை குறும்படமாக மாற்றினோம். மயில்சாமி சாரிடம் இந்த கதையை கூறியபோது அவர் என்னிடம், எல்லோரும் எனக்கு பெரும்பாலும் ஒரே விதமான கதாபாத்திரங்களையே கொடுத்து நடிக்க வைக்கின்றனர்.
இதுபோன்ற கதாபாத்திரங்கள் நிறைய பண்ண வேண்டும்.. நிச்சயமாக நாம் இருவரும் இணைந்து ஜெயிப்போம் என்று சொன்னார்.. அவர் சொன்னது போல ஜெயித்து விட்டோம்” என்று கூறினார்.
நடிகர்கள்
மயில்சாமி, ரேகா நாயர், சுகைல், இப்ராஹீம்,ராம் மற்றும் பலர்
தொழில்நுட்ப கலைஞர்கள்
தயாரிப்பு ; அசோக்குமார்
இயக்குனர் ; A.ராகுல்
இசை ; கார்த்திக் ராஜா
ஒளிப்பதிவு ; அசோகர்
படத்தொகுப்பு ; இம்ரான்.S
கலை ; பிரதீப்
மக்கள் தொடர்பு ; M.P.ஆனந்த்
Due to sudden demise of mayil samy vilambaram becomes short film – Rahul