தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
சிம்பு நடிப்பில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கியுள்ள திரைப்படம் மாநாடு.
யுவன்ஷங்கர் ராஜா இசை அமைக்கிறார்.
சிம்புவுடன் கல்யாணி பிரியதர்ஷன், பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகர், கருணாகரன், பிரேம்ஜி, மனோஜ் பாரதிராஜா, உதயா, அரவிந்த் ஆகாஷ் உள்ளிட்ட நடிகர்கள் மாநாடு படத்தில் நடித்துள்ளனர்.
தெலுங்கில் ‘தி லூப்’ என்ற பெயரில் இன்று நவம்பர் 25ல் ரிலீசாகிறது.
தமிழகத்தில் ‘மாநாடு’ சிறப்பு காட்சிக்கான முன்பதிவு கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கியது.
தொடங்கிய சில மணி நேரங்களிலேயே அனைத்து டிக்கெட்களும் விற்றும் தீர்ந்துவிட்டன.
இந்த படம் இன்று நவம்பர் 25 ஆம் தேதி ரிலீசாகவுள்ள நிலையில் திடீர் என தள்ளி வைப்பதாக அறிவித்தார் சுரேஷ் காமாட்சி. அறிவித்த நேரம் 24/11/2021 மாலை 6 மணி்.
அவரின் ட்விட்டர் பதிவில்..
நிறைய கனவுகளோடு படைக்கப்பட்ட ஓர் படைப்பு. இதின் பிரசவத்தை எதிர்நோக்கிக் காத்திருந்திருந்தேன்
தவிர்க்க இயவாத காரணங்களால் #மாநாடு வெளியீடு தள்ளி வைக்கப்படுகிறது என்பதை மிகுந்த வலியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
வெளியாகும் தேதி பின்னர் அறிவிக்கிறேன்.. ஏற்பட்ட சிரமங்களுக்கு வருந்துகிறேன்.” என பதிவிட்டார்.
இவையில்லாமல் மாநாடு படத்திற்கான கடன் கொடுக்கல் வாங்கல் பிரச்சனை பஞ்சாயத்து முற்றியதாகவும் கூறப்படுகிறது.
நேற்று 11.30 மணியளவில் ‘மாநாடு’ படத்திற்கான பண பிரச்சனை முடிவுக்கு வந்துவிட்டதாகவும், அதனால் திட்டமிட்டபடி படம் (நவ.25) வெளியாகும் என தெரிய வந்தது..
இப்பட இயக்குனர் வெங்கட் பிரபு.. ‘மாநாடு’ ரிலீஸ் என அறிவித்தார்.
இதனையடுத்து தமிழகத்தில் அதிகாலை காட்சிகள் உறுதி செய்யப்பட்டன. ரசிகர்களும் கொண்டாட்டங்களுடன் காத்திருந்தனர்.
ஆனாலும் ரீலீசில் சிக்கல் என மீண்டும் பிரச்சினை ஆரம்பமானது. பேச்சுவார்த்தை தொடங்கியது.
எனவே தமிழகம் முழுவதும் அதிகாலை 5 மணி காட்சிகள் ரத்தானது.
இதனால் தியேட்டர்களில் ரசிகர்கள் டென்சன் ஆனார்கள்… காவர்துறையினர் & பவுன்சர்கள் ரசிகர்களை உள்ளே நுழைய விடாமல் தடுத்தனர். சில இடங்களில் கலாட்டாக்கள் நடைபெற்றன.
ரிலீஸ் தொடர்பான KDM பிரச்சினை பேசப்பட்டது. இந்த KDM பிரச்னையால் படம் காலை வெளியாகவில்லை.
இந்த KDM-தான் பாஸ்வேர்டு. இது வந்தால்தான் ஒரு படத்தை தியேட்டரில் திரையிடவே முடியும்.
ஆரம்ப காலங்களில் படப்பெட்டி & படச்சுருளுக்காகக் காத்திருக்கும் திரையரங்குகள் இன்று KDM-ஐ எதிர்பார்த்துக் காத்திருக்கின்றன.
பின்னர் ஒருவழியாக 25/11/2021 காலை 7 மணியளவில் KDM பிரச்சினை முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டது.
7 மணி முதல் ‘மாநாடு’ படத்தை திரையிட அனுமதி கிடைத்துள்ளது.
இது குறித்து காலை 7.15 மணிக்கு சுரேஷ் காமாட்சி தன் ட்விட்டரில் பதிவிட்டார். அதில்…
Everything ok. Sry for the trouble the fans crossed. Nw its our time. God s great. Thnks to everyone who stood for me.
#Maanaadu
Early morning Shows Cancelled.. Later All issues sorted out Simbus Maanadu released
#Maanaadu Release update – All concerned parties are trying to sort out financial issue surrounding the film. If the issues ( KDM – digital & satellite rights sale) are worked out by midnight, will green light release.